• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் கூட்டம் பற்றிய தகவல்
  2015-02-09 09:58:28  cri எழுத்தின் அளவு:  A A A   

கடிந்த நவம்பர் 5ஆம் நாள் முதல் ஏபெக் அமைப்பின் கூட்டத் தொடர்கள் பெய்ஜிங்கின் குவாய் ழோ மாவட்டத்தில் நடைபெற துவங்கியது. 2014ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவர் கூட்ட வாரம் என்பது நடப்புக் கூட்டத் தொடரின் அதிகாரப்பூர்வமான பெயராகும். நவம்பர் 5 முதல் 11ஆம் நாள் வரையான ஒரு வாரக் காலத்தில் இவ்வமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் உள்பட 6 கூட்டங்களும் சில விவாதங்களும் நடைபெற்றுள்ளன. இக்கூட்டங்கள் எப்படி நடைபெற்றன. அவற்றுக்கிடையிலான உறவு என்ன, ஏன் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் என அழைக்கப்படுகிறது என்று பல நேயர்கள் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டனர். சரி, இன்றைய நிகழ்ச்சியில் அவற்றைப் பற்றி விபரமாக எடுத்துகூறுவேன்.

தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம்

ஏபெக் அமைப்பின் முழு பெயர் ஆசிய பசிபிக் பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பு என்பதாகும். அதற்கு 5 இயங்கு முறைகள் உண்டு. தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம், அமைச்சர் நிலைக் கூட்டம், உயர் நிலை அலுவலர்கள் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பணிக் குழு, செயலகக் குழு ஆகியவை இந்த இயங்கு முறைகளாகும்.

ஏபெக் அமைப்பு 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால், அதன் முதலாவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் அமெரிக்காவின் சியாடோலில் நடைபெற்றது. அதற்குப் பின், ஆண்டுக்கு ஒருமுறை எனத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெறுகிறது.

முதலாவது தலைவர்களது அதிகராப்பூர்வமற்ற கூட்டத்தை அமெரிக்க முன்னாள் அரசுத் தலைவர் பில் கிளிண்டன் ஆரம்பித்தார். தூதாண்மை வரலாற்றில் இது மிக தனிச்சிறப்புடையது. முதலாவது கூட்டத்துக்குப் பேட்டியளித்த சீனச் செய்தியாளர் ஒருவர் இப்படி எழுதினார்.

இது ஒரு அதிகாரப்பூர்வற்ற கூட்டமாகும். இருந்தபோதிலும் இதில் கலந்து கொண்டவருக்கு அதிக விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைவருடனும் ஒரு உதவியாளர் மட்டும் இந்தத் தீவுக்கு வர முடியும். மட்டுமல்லாமல், இந்த உதவியாளர் அவரது தலைவருடன் கூட்டம் நடைபெறும் அறையில் நுழைய முடியாது. ஆனால், அருகில் தங்கியிருந்து அவரது தலைவருக்கு ஆலோசனை வழங்கத் தயாராக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர்களும் வேறு ஒரு அறையில் பணி புரிய வேண்டும் என்று அவர் எழுதினார்.

முன்னதாக தயாரிக்கப்பட்ட அறிக்கை போன்ற ஆவண வரைவைத் தவிர, இத்தகைய கூட்டத்தில் வேறு எந்தப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று முன்னதாக உறுதி செய்ய மாட்டாது. கூட்டத்தில் தலைவர்கள் தங்கள் விருப்பத்தின் படி உரை நிகழ்த்தலாம். சிலவேளையில், கூட்டத்தில் ஒரு புதிய முன்மொழிவு வழங்கப்படும். அனைவரின் ஆதரவைப் பெற்றால், இந்த புதிய முன்மொழிவு கூட்டத்தின் அறிக்கையில் சேர்க்கப்படும். அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் உடன்படிக்கை எதுவும் எட்டப்படாது. ஆனால், கூட்டத்தின் அறிக்கைக்கு அதிக அதிகாரம் உண்டு. கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வழங்கிய வாக்குறுதியும் ஒத்த கருத்தும் எபெக் அமைப்பின் வளர்ச்சி திசைக்கு வழிகாட்டும்.

சியாடோல் கூட்டத்துக்குப் பிறகு, எபெக் அமைப்பில் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்றக் கூட்டம் என்பது ஒரு முறைமையாக பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் பன்னாடுகளின் தலைவர்கள் உதவியாளர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் இல்லாத நிலையில் ஒன்றுகூடி விவாதிக்கும் நிழற்படமும் செய்திகளும் பல செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியிடப்படுகின்றன.

இந்தக் கூட்டத்தில் தலைவர்களின் ஆடைகளும் பொது மக்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிகாரப்பூர்வமற்ற என்ற காரணத்தால், கூட்டத்தில் தலைவர்கள் வழக்கமாக அணியும் மேலை நாட்டு ஆடைகளை அணிய மாட்டார்கள். முதலாவது அதிகாரப்பூர்வமற்றக் கூட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் பில் கிளிண்டன் ஜீன்ஸ் அணிந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

1994ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் மாவு கூட்டத்தில் எபெக் தலைவர்களுக்கு ஒரே மாதிரி ஆடைகளை விநியோகிக்கும் புதிய முயற்சி துவங்கப்பட்டது. இந்தோனேசிய நாட்டின் மிக பாரம்பரிய பாத்திக் எனும் மேலாடைகளை அப்போதைய இந்தோனேசிய அரசுத் தலைவர் சுகாடோ இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040