• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் கூட்டம் பற்றிய தகவல்
  2015-02-09 09:58:28  cri எழுத்தின் அளவு:  A A A   

பிறகு, பிலிப்பைன்ஸின் பாலுன், சிலி நாட்டின் ட்சமான்டோ, வியட்நாமின் ஓடை முதலிய பாரம்பரிய ஆடைகள் எபெக் தலைவர்களின் குழு படத்தில் தோன்றியுள்ளன. உபசரிப்பு நாடுகளின் பண்பாட்டை பரப்புரை செய்யும் அதேவேளையில், இத்தகைய நடவடிக்கை ஆசிய-பசிபிக் குடும்பம் பெரிய குடும்ப அமைப்பினைக் கொண்டது என்ற கருத்தையும் பரப்புரை செய்கின்றது.

எபெக் அமைப்பின் அமைச்சர் நிலை கூட்டம்

எபெக் அமைப்பின் அமைச்சர் நிலை கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். பொதுவாக இவ்வமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வற்ற கூட்டத்துக்கு இது முன்னேற்பாடு செய்கிறது. தவிர, பிரதேச முக்கிய பொருளாதார பிரச்சினை பற்றியும் இக்கூட்டம் விவாதித்து, எபெக் அமைப்பின் ஒத்துழைப்பு அம்சங்களை தீர்மானிக்கின்றது.

உயர் நிலை அலுவலர்கள் கூட்டம்

எபெக் அமைப்பின் உயர் நிலை அலுவலர்கள் கூட்டம் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை நடைபெறுகின்றன. தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் கூட்டத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அது ஏற்பாடு செய்கிறது.

இவ்வாண்டின் எபெக் உயர் நிலை அலுவலர்கள் கூட்டங்கள் முறையே சீனாவின் நிங்போ, சிங்தாவ், பெய்ஜிங் ஆகிய இடங்களில் 4 முறையாக நடைபெற்றன.

எபெக் தொழில் மற்றும் வணிக ஆலோசனை செயற்குழு

இக்குழு மூலம் பல்வேறு நாடுகளின் தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள் எபெக் ஒத்துழைப்பில் சிறப்பாக பங்கெடுக்கும் நல்ல வழிமுறையாகும். இது ஆண்டுக்கு சுமார் 4 முறை நடைபெறுகிறது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040