• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாடுகளில் சீனாவின் தொழில் நிறுவனங்களின் முதலீடு
  2015-02-09 10:34:08  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவை அதிகரித்து வருகிறன. அதற்கான காரணம் ஏன்?

ஒருபுறம், சீனாவில் பொருளாதாரம் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேகமான வளர்ச்சியுடன் வளர்ந்து வருகின்றது. அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகமாக உயர்ந்து வருகின்றது. இவ்வாண்டு 3ஆவது காலாண்டில் சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 3 இலட்சத்து 89 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். அதன் விளைவாக, அமெரிக்க டாலரின் பண வீக்கம் மற்றும் நாணய மதிப்பிறக்கம் என்ற இரட்டை நிர்பந்தத்தைச் சீனா சந்தித்திருக்க வேண்டும். மறுபுறம், ரென் மின்பியின் உலக மயமாக்கத்தைச் சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகிறது. படிப்படியாக ரென் மின்பியும் பல நாடுகளின் கையிருப்பு நாணயமாக மாறி வருகிறது. இதன் அடிப்படையில் தான், வெளிநாடுகளில் சீனா முதலீடு செய்வது முன்பை விட வசதியாக உள்ளது. மூன்றாவதாக, குறுகிய காலத்தில் சீனாவின் உள்நாட்டு தேவை வேகமாக வளர்வதற்குரிய வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆகவே, உள்நாட்டில் தொழில் நிறுவனங்களின் முதலீடு விரைவாக எதிர்பார்த்த பயனைப் பெற முடியாது. வெளிநாடுகளில் முதலீடு செய்வது அவற்றுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்பினைக் கொண்டு வரும்.

ஈசாம்பு எனும் விளம்பரம் மற்றும் வணிகச் சேவை நிறுவனம் அண்மையில் இத்தாலியின் பால்மா இண்டர்நெட் விமான நிலையத்தை வாங்கியது. ஈசாம்பு நிறுவனத்தைச் சேர்ந்த நாடு கடந்த இணைய வணிகத்திற்காக ஐரோப்பாவிலிருந்து சீனாவுக்கு கனரகப் பொருட்களை நேரடியாகவும் வேகமாகவும் கொண்டு செல்லும் வழியை இச் செயல் உருவாக்கியுள்ளது என்று கருதப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்பட்ட வணிகப் பொருட்கள் முன்பை விட மேலும் விரைவாக சீன நுகர்வோருக்கு அனுப்பப்படலாம். ஈசாம்பு குழுமத்தின் தலைமை இயக்குநர் ரோ ஃபுங் கூறியதாவது

ஒருபுறம், இத்தாலியில் வரி விலக்கு கிடங்கையும் கண்காட்சி மையத்தையும் கட்டியமைத்துள்ளோம். அவற்றின் மூலம் சீனாவின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க சந்தைக்கு அறிமுகப்படுத்துகின்றோம். மறுபுறம், ஐரோப்பிய வணிகப் பொருட்கள் சீனாவுக்குள் நுழைவதற்கு முந்தைய சேகரிப்பு மற்றும் பொருள் பெயர்ச்சி மையமாகப் பயன்படுத்தப்பட முடியும் என்றார் அவர்.

இன்னொரு மாதிரியைப் பார்ப்போம். அக்டோபர் 13ஆம் நாள் சீனாவின் ஆன்பான் காப்புறுதி நிறுவனம் பெல்ஜியத்தைச் சேர்ந்த நூறு ஆண்டு வரலாறுடைய ஒரு காப்புறுதி நிறுவனத்தை வாங்கியது. சீனக் காப்புறுதி கூட்டு நிறுவனம் ஒன்று ஐரோப்பாவின் ஒரு காப்புறுதி நிறுவனத்தின் 100 விழுக்காட்டு பங்கு பத்திரத்தை வாங்குவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து பெல்ஜிய காப்புறுதி நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி எத்வேன் கூறியதாவது

ஆன்பான் நிறுவனத்தைச் சேர்ந்த பிறகு, சந்தையில் எங்கள் ஆற்றல் மேலும் வலுவானது. இது மிக முக்கியமானது. ஏனென்றால், பெல்ஜியத்தில் சந்தைப் போட்டி மிகவும் தீவிரமானது என்று அவர் கூறினார்.

இவ்வாண்டின் முதல் 9 திங்களில், வெளிநாட்டில் சீனாவின் முதலீட்டுத் தொகை 7 ஆயிரத்து 496 கோடி அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட இது 21.6 விழுக்காடு அதிகம் என்று சீன வணிக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சேன் தான்யாங் தெரிவித்தார். அவர் கூறியதாவது

கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட அமெரிக்காவுக்கான முதலீட்டுத் தொகை சுமார் 30 விழுக்காடு அதிகமாகும். ஐரோப்பாவுக்கான முதலீட்டுத் தொகை 218 விழுக்காடு அதிகமாகும். ரஷியாவுக்கான முதலீட்டுத் தொகை கிட்டத்தட்ட 70 விழுக்காடு அதிகமாகும் என்று அவர் கூறினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040