• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாடுகளில் சீனாவின் தொழில் நிறுவனங்களின் முதலீடு
  2015-02-09 10:34:08  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐரோப்பாவில் சீனக் கூட்டு நிறுவனங்கள் முதலீடு செய்த பிறகு, முன்பு சிலர் கவலைப்பட்ட பிரச்சினைகள் ஏற்படவில்லை. உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உள்ளூர் நிறுவனங்களின் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு முதலீட்டைப் பின்வாங்கும் நிலைமையும் நிகழவில்லை. மாறாக, இந்த உள்ளூர் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, சந்தை பங்கு, உற்பத்தி அளவு முதலியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை செயல்படத் துவங்கிய போது, வெளிநாட்டு முதலீட்டை உட்பகுப்பது பல்வேறு நிலை அரசுகளின் முக்கிய கடமையாக இருந்தது. ஆனால், தற்போது, வெளிநாடுகளில் சீனாவின் முதலீட்டுத் தொகை, சீனாவிலுள்ள வெளிநாட்டு முதலீட்டுத் தொகைக்கு சமமாகும். வெளிநாட்டு மூலதனம் மிக்க நாடாக சீனா வேகமாக மாறி வருகிறது.

வெளிநாடுகளில் முதலீடு பற்றிய நிர்வாக விதிகள் என்ற சட்ட ஆவணம் புதிதாக திருத்தப்பட்டு நவம்பர் திங்கள் 6ஆம் நாள் அமலுக்கு வந்தது. புதிய ஆவணத்தின் படி, சீனாவின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் பொழுது, நாணய நிறுவனங்களைத் தவிர்ந்த அலுவல்களை மேற்கொள்வது உட்பட செயல்களில் 98 விழுக்காடு அரசிடம் பதிவு செய்வது மட்டும் போதும். அனுமதி வாங்கத் தேவையில்லை.

தவிர, முன்பு எரியாற்றல், மூலப் பொருள் முதலிய துறைகளில் சீனத் தொழில் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்தன. தற்போது, வெளிநாடுகளின் சில்லறை விற்பனை, மருத்துவம், உயர் அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளில் சீனத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய துவங்கின.

சீன மக்களின் நுகர்வுத் தேவையும் இத்தகைய நடவடிக்கைகளால் நலன் பெறுகின்றது. தற்போது பல சீன நகரங்களின் கடைகளில் வெளிநாட்டு வணிகப் பொருட்கள் விற்பனை செய்யபடுகின்றன.

நுகர்வோர்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் அதிகமாகியுள்ளன. விலையும் பரவாயில்லை என்று பேரங்காடியில் வாடிக்கையாளர் ஒருவர் கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040