• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யி இனத்தின் ஒளிப்பந்த விழா
  2015-03-04 16:40:15  cri எழுத்தின் அளவு:  A A A   

யி இன மங்கையர் லன் ஐ ஜு எமது செய்தியாளரிடம் பேசுகையில், தீ என்பது, வெளிச்சத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது. எனவே, யி இனத்தவர்களின் அதிகமான விழாக்களில் ஒளிப்பந்த விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது என்றார். அவர் கூறியதாவது:

"ஒளிப்பந்த விழா, மிகவும் முக்கியமான ஒரு பாரம்பரிய விழாவாகும். இந்நாளில் அனைத்து யி இன உடன்பிறப்புகளும் ஒன்றுகூடி வெவ்வேறு வகைகளில் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்" என்றார் அவர்.

ஒளிப்பந்த விழா பற்றி பல கதைகள் நிலவுகின்றன. யி இனத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் லியு யுவன் லுங், தமது சிறு வயதில் கேட்ட ஒரு கதை பற்றி செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"வெகுகாலத்துக்கு முன்னர், வானில் ஒரு கொடிய அரக்கன் இருந்தான், அவன் சொர்க்கலோக மன்னரின் கட்டளைக்கிணங்க யி இன மக்களிடம் வந்து வரிவசூலித்து கொள்ளையடித்தார். யி இன மக்கள் அவரை எதிர்த்துப் போராடி, அவர்களில் வீரர் ஒருவர் இக்கொடிய அரக்கனைக் கொலை செய்தார். சொர்க்கலோக மன்னர் இதைக் கேள்விப்பட்டதும் கோபமடைந்து, பயிர்களை அழிக்க வான்பூச்சிகளையும் அனுப்பச்செய்தார். கண்கள் நிறைய காணப்பட்டுள்ள வான் பூச்சிகள், மூன்று நாட்களிலும் மூன்று இரவுகளிலும் விளைந்த பயிர்களை தின்றன. பயிர்கள் அழியும் விளம்பில் இருக்கும் போதே, யி இன மக்கள் ஒளிப்பந்தங்களை உடம்பில் கட்டிக்கொண்டு, வயல்களை நோக்கி விரைந்தனர். வான்பூச்சிகளை திக்கிரையாக்கினர். இவ்வாறு பயிர்கள் காப்பாற்றப்பட்டன. அதற்குப் பின், ஆண்டுதோறும் இந்நாளில் ஒளிப்பந்தம் ஏற்றி அமோக அறுவடைக்காக வழிபாடு செய்கின்றனர்" என்றார், அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040