• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யி இனத்தின் ஒளிப்பந்த விழா
  2015-03-04 16:40:15  cri எழுத்தின் அளவு:  A A A   

குவெய் சோ மாநிலத்தின் Shui Cheng மாவட்டத்தில் தேசிய இன விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரி சசூதே எமது செய்தியாளரிடம் பேசுகையில் யி இனத்தின் ஒளிப்பந்த விழா தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு, மேலும் அதிகமான தேசிய இன தனித்தன்மை மிக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் கூறியதாவது:

"வேறு சில இளைஞர்களும் இளம் பெண்களும் மலைகளில் ஏறி நாட்டுப்புறப்பாடல் பாடுகின்றனர். சிலர், மாடு, கோழி, ஆடு முதலிய மிருகங்களுடன் விளையாடுகின்றனர். விழாவுக்கான கொண்டாட்டங்கள், மிகவும் ஏராளமானவை" என்றார்.

ஒளிப்பந்த விழா கொண்டாடப்படும் இடத்தில் மா லாங் தியே கிராமத்தின் அனைவரும் ஒளிப்பந்தங்களுடன் வயல்களைச் சுற்றிச்சென்று, அமோக அறுவடைக்கு வழிபாடு செய்கின்றனர். பின்னர், அனைவரும் சமநிலத்துக்கு வந்து ஒளிப்பந்தங்களை ஒரு கோபுரமாக குவித்து, வட்டமாக சுற்றிச்சுற்றி ஆடிப்பாடுகின்றனர். ஒரே ஆரவாரம் தாண்டவமாடுகின்றது. இதற்குப் பின், சில இளைஞர்கள் இளம் பெண்களுடன் மரங்களிடையே நிலா ஒளியில் நாட்டுப்புறப்பாடலைப்பாடி, காதலைத் தெரிவிக்கின்றனர். அருமையான வாழ்க்கைக்கு எதிர்பார்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040