• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங் இன கிராமத்தில் நூறு குடும்ப விருந்து
  2015-07-23 09:35:20  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் சீனாவின் குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த துங் இனத் தன்னாட்சி மாவட்டம் பல நூறு கிராமங்களுடையது.

ச்செங் யாங் கிராமம், அவற்றில் இயற்கைக்காட்சி மிகவும் எழிலான ஒன்று. இக்கிராமத்தில் தான், எமது செய்தியாளர் துங் இனத்தின் "நூறு குடும்ப விருந்து" பற்றி அறிந்து கொண்டார். இன்றைய நிகழ்ச்சியில், அங்கு போய், துங் இன மக்களுடன் சேர்ந்து இவ்விருந்தை சுவைத்து, அவர்களின் உற்சாகத்தையும் விருந்தோம்பலையும் நேரில் காண்போம்.

முதலில், "நூறு குடும்ப விருந்து" என்பதன் விளக்கத்தைக் கூறுகின்றோம். பண்டைக்காலத்தில், ஒரு துங் இன கிராமத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல் வயல் நீரில் மூழ்கி விடும். வீடுகள் விழ்ந்து விடும். மக்கள் வெள்ளத்தில் உயிரிழந்து விடுவர். அப்போது தான், திடீரென வானிலிருந்து வீரர் ஒருவர் இறங்கி தமது வலுவான கையால் வெள்ளப்பெருக்கு பிசாசின் முதுகெலும்பை முறித்தார். இவ்வீரருக்கு மதிப்பு தெரிவிக்கும் வகையில், வீட்டில் உணவு உட்கொள்ளுமாறு இவ்வீரரை ஒவ்வொரு குடும்பமும் அழைத்தன. ஆனால், இவ்வீரர், அடுத்த நாள் அதிகாலையிலேயே இக்கிராமத்தை விட்டுச் செல்ல வேண்டும். எனவே, ஒவ்வொரு வீட்டில் விருந்தினராக இருக்க முடியாது. இந்நிலையில், அழகான துங் இன பெண் ஒருவர் நல்ல யோசனை கூறினார். அதாவது, ஒவ்வொறு குடும்பமும் தலைசிறந்த, ருசியான காய்கறிகளைச் சமைத்து கொண்டு வந்து ஒன்றாக வைத்து கிராமவாசிகள் அனைவரும் இவ்வீரரை உபசரிப்பது, இந்த யோசனையாகும். இவ்விருந்தில் நூறு குடும்பங்களின் காய்கறிகளும் இடம்பெறுவதினால், இது "நூறு குடும்ப விருந்து" எனப்பட்டது. இது முதல், துங் இனத்தவர்கள், தத்தம் கிராமத்தில் மதிப்புள்ள விருந்தினர் வரும் போது, அல்லது, மிகழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிக்காக இனத்தவர்கள் ஒன்று கூடும் போது, "நூறு குடும்ப விருந்து" நடைபெறுகின்றது. இப்பழக்கம், இப்போதும் தொடர்கின்றது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040