• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:கத்திரிக்காய் மற்றும் அவரைக்காய் பொரியல்
  2015-06-21 17:11:54  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா....... இப்போது, தேவைப்படும் பொருட்கள் தயார். ஆயத்த பணிக்கு போகலாமா.

சக்திவேல்....... கண்டிப்பாக. முதலில், கத்திரிக்காயைச் சுத்தம் செய்து, நீண்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள்.

ஜெயா.......பிறகு, கத்திரிக்காய் துண்டுகளை, தண்ணீரில் வைத்து, சில நிமிடங்களுக்குப் பிறகு, அதை வெளியே உலர வையுங்கள்.

சக்திவேல்.......அடுத்து, அவரை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

ஜெயா.......காய்ந்த மிளகாய்களை சிறிய துண்டுகளாகவும், பூண்டுத் துண்டுகளை மேலும் சிறிய துண்டுகளாகவும் வெட்டுங்கள்.

சக்திவேல்.......சரி, ஆயத்த பணி முடிந்து விட்டது. சமைக்கப் போகலாமா?

ஜெயா.......போகலாம், முதலில், வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்குங்கள்.

சக்திவேல்.......எண்ணெய் மிதமாக சூடாகிய பிறகு, கத்திரிக்காய் துண்டுகளை போட்டு, பொரியுங்கள்.

ஜெயா.......கத்திரிக்காய் மென்மையாக மாறிய போது, வெளியே எடுங்கள்.

சக்திவேல்.......அவரைத் துண்டுகளையும் சூடான எண்ணெயில் போட்டு வதக்குங்கள்.

ஜெயா.......அவரைத் தோல் சுருக்கமாக மாறும் போது வெளியே எடுக்க வேண்டும்.

சக்திவேல்....... இப்போது வாணலியிலுள்ள அதிகமான எண்ணெயை வெளியே எடுத்து விட்டு, வாணலியில் சிறிதளவு எண்ணெயை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது சில பூண்டு துண்டுகளையும், காய்ந்த மிளகாய் துண்டுகளையும் வாணலியில் போடுங்கள்.

ஜெயா.......வாசனம் வீசிய பிறகு, பொரித்திருந்த கத்திரிக்காயையும், அவரையும் உள்ளே போட்டு வதக்குங்கள்.

சக்திவேல்.......இப்போது மிதமான சோயா சாறு, சிப்பி சாறு, கொஞ்சம் தண்ணீர் ஆகியவற்றை வாணலியில் ஊற்றி கலந்து, தொடர்ந்து வதக்குங்கள்.

ஜெயா.......மூடி வைத்து கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்கள். வாணலியிலுள்ள சாறு, அடர்த்தியாக மாறிய போது, தீயை அணையுங்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040