• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மங்கோலிய உடை
  2015-06-24 10:12:47  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆடை, உணவு, இல்லம், போக்குவரத்து ஆகிய பொருட்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் அடிப்படை தேவைகள் ஆகும். மங்கோலிய இனத்தின் இந்த அடிப்படை தேவைகள் பற்றி சுவையான செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஒரு தேசிய இனத்தின் பாரம்பரிய வழக்கம் மற்றும் அதன் தனித்தன்மை, அதந் இனத்தின் ஆடைகளில் இருந்து காணப்படுகிறது. மங்கோலிய உடை, மங்கோலிய இனத்தின் தனிச்சிறப்பை சிறப்பாக வெளிக்காட்டுகிறது. கால்நடை உற்பத்தி மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில், மங்கோலிய மக்கள் இந்த பழைய பராம்பரிய உடைகளை தயாரித்தனர். ஓராண்டின் நான்கு பருவங்களிலும், மங்கோலிய மக்கள் இத்தகைய உடையை அணிந்து வருகின்றனர்.

இந்த உடைகளின் வகைகள் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில், உடைகளை மாற்றிக் கொள்வர். பொதுவாக நீல நிறமான நுணியால் தயாரிக்கப்படும் ஆண்களின் ஆடை பெரியதாக உள்ளது. சிவப்பு, பசுமை அல்லது மஞ்சள் நிறமான பட்டுப் பொருட்களால் தயாரிக்கப்படும் பெண்களின் ஆடை, இறுக்கமாக உள்ளது.. மங்கோலிய இனத்தின் பல்வேறு பிரிவுகளிடையே இந்த உடைகள் பெரிதும் வரவேற்கப்படும். ஆனால், பல்வேறு பகுதிகளில் வேறுபட்ட தனிச்சிறப்பு உடையது. மங்கோலிய பாவ் எனும் உடையை நீங்கள் ஆவலுடன் பார்க்க விரும்பினால், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணையதளத்தின் சீனப் பண்பாடுப் பிரிவில் உலா வருங்கள். இந்த உடைகள் பற்றி படத் தொகுப்பை அங்கே வெளியிட்டிருக்கின்றோம்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040