• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மங்கோலிய உடை
  2015-06-24 10:12:47  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து, மங்கோலிய இனத்தின் சிறப்பான வீடு பற்றிய செய்திகளை வழங்குகின்றோம்.

மன்சு மொழியின் உச்சரிப்புமுறையில், மங்கோலிய இனம் வசிக்கும் வீடு, மங்கோலிய பாவ் என அழைக்கப்படுகிறது. இந்த பேச்சு வழக்கு, 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. இந்த வீட்டின் வடிவம், கூடாரம் போல இருக்கிறது. இந்த வீட்டில் அழகான தோற்றம், சிறப்பான கட்டமைப்பு, சிறந்த தொழில் நுட்பம் ஆகியவை காணப்படலாம். இந்த கூடாரத்தின் கட்டமைப்பின் பல்வேறு பகுதிகள் எளிமையாக பிரித்து எடுக்கப்பட்டு, மீண்டும் ஒன்றிணைக்கப்படாலம். எனவே, அது, மங்கோலிய மக்களுடைய நாடோடி வாழ்க்கைக்கு துணைபுரியும். அதேசமயம், அதன் சிறப்பான கட்டமைப்பு, காற்று மற்றும் பனி போன்ற கடுமையான வானிலையின் பாதிப்பைத் தடுக்கலாம். மங்கோலிய பண்பாட்டின்படி, இந்த கூடாரம் 9 இருக்கைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, மங்கோலிய இனத்தின் போக்குவரத்து வசதி பற்றி கூறுகின்றோம்.

உள்ளூரில் லேலேசெ என அழைக்கப்படும் வண்டி, மாட்டு வண்டி பயன்படுத்தப்படுகிறது. இவ்வண்டி, மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இது, புல்வெளியில் வாழும் மேய்ப்பாளர்கள் பயன்படுத்தும் ஒரு முக்கிய போக்குவரத்து வசதி. நாடோடி வாழ்க்கை காரணமாக, மங்கோலிய மக்கள் வண்டிகளைத் தயாரித்து பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது.

வண்டி சக்கரம் உயரமாகவும் பெரியதாகவும் உள்ளது. அதனை, நெடுங்காலம் நீடித்து பயன்படுத்தப்படலாம். உயரமான மற்றும் பெரிய சக்கரங்களுடன், வண்டி, சிக்கலான சாலையில் வந்துச் செல்லும். 100 முதல் 150 வரை கிலோ எடையுள்ள பொருட்களை, இந்த வண்டி ஏற்றிச் செல்லக் கூடியது.

பழங்காலத்திலும், தற்காலத்திலும், ஒரு பெரிய வண்டி அணியில், பத்துக்கும் அதிகமான மாட்டு வண்டிகள் அடங்கும். இந்த பெரும் அணியை ஒருவர் மட்டும் ஓட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேலேசெ எனும் இந்த வண்டிகள், மேய்ப்பாளர்களின் வாழ்த்துக்களையும் இன்பத்தையும் ஏற்றுச்செல்லும். நீளமான வண்டி அணி, மங்கோலிய இன மக்களின் எதிர்பார்ப்பைக் கொண்டு வருவதற்கான குறியீடாகும்.

சரி, நேயர் நண்பர்களே, இத்துடன், இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. சீனத் தேசிய இனங்கள் நிகழ்ச்சி குறித்த உங்களின் கருத்துக்களைக் கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரிவியுங்கள். அடுத்த செவ்வாய்கிழமை மீண்டும் சீனத் தேசிய இனங்கள் நிகழ்ச்சியைக் கேட்கத் தவறாதீர்கள். நன்றி வணக்கம்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040