ஶான்சி மாநிலத் தலைநகர் சியானின் கிழக்குப் பகுதியில் புதிதாக எழுபப்பட்டுள்ள மாவட்டத்தின் பெயர் சன் பா. சன் ஆறு, பா ஆறு என இரு ஆறுகளின் மடியில் பிறந்து தவழ்ந்து வரும் மாவட்டம் என்பதால் இதற்கு சன் பா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சன் பா சூழலியல் மாவட்டம் என பெருமையுடன் இது அழைக்கப்படுவதற்குக் காரணம், நகர் உருவாக்கத்தின்போது சூழலியல் காரணிகள் முக்கிய அங்கமாகக் கருத்தில் கொள்ளப்பட்டதுதான்.