சங் மற்றும் பா ஆறுகளின் இயற்கைத் தன்மைக்கு எவ்வித இடையூறும் இன்றி இப்புதிய மாவட்டம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. சங் பா அருங்காட்சியகத்தில் மாவட்டம் தொடர்பான நில வரைப்படம் ஒழுங்குடன் காட்சி அளிக்கிறது. இது, 129 கிலோ மீட்டரில் அமைந்துள்ள இந்த நகர் குறித்த விரிவான பார்வையை நமக்கு அளிக்கும்.
தேசிய அளவில் சிறந்த சூழலியல் மாவட்டம் என பெருமை பெற்றுள்ள சன் பா அமைந்துள்ள தற்போதைய இடம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெறும் குப்பைகளின் கூடாரம். ஆனால், இப்போது, மா நிறுவனங்களுக்கான நுழைவாயில். நிறுவனங்களுக்கு ஒரு நுழைவாயில் என்றால், பறவைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கு மற்றொரு நுழைவாயிலாக இருப்பவை 4 பெரிய பூங்காக்கள். இதனால் இயற்கையையும், வளர்ச்சியையும் சமநிலைப்படுத்தியுள்ளது ஶான்சி அரசு.
குடியிருப்பு வளாகம், சுற்றுலாத் தளம், வர்த்தக மையம், சர்வதேச மாநாட்டு அரங்கு, சூழலியல் பூங்காக்கள், போக்குவரத்து மற்றும் சரக்கு பிணையம் என பல ஆபரணங்கள் சன் பா மாவட்டத்தை கதிரவன் போல பிரகாசமாக ஒளிர வைத்து வருகிறது. இது வெறும் தொடக்கம்தான், வளர்ச்சி இனிமேல்தான் என்கிறது சான் பா சூழலியல் மாவட்டமும் அதன் அதிகாரிகளும். உலக அளவில் சிறந்த மாவட்டமாக சன் பா உருவெடுக்கும் என்பது சன் பா மாவட்ட துணை இயக்குநர் சங் பின்னின் அசைக்க முடியாத நம்பிக்கை.