பாலர் கல்வி
சீனாவில், பள்ளி செல்லும் வயதுக்கு முற்பட்ட 0-6 வயது குழந்தைகளுக்கான கல்வியை, பாலர் கல்வி குறிக்கிறது.
பாலர் பள்ளிகளில், பள்ளி செல்லும் வயதுக்கு முந்திய வகுப்புகளில் இது நடத்தப்படுகிறது. வெவ்வேறான வயது குழந்தைகளின் ஆற்றல் முதிர்ச்சி, உளவியல் குணம் ஆகியவற்றுக்கிணங்க, பாலர் கல்வித் திட்டத்தை சீனக் கல்வி வாரியங்கள் சிறப்பாக வகுத்துள்ளன. இத்திட்டப்படி, உணர்வறி புலன் மூலமான மனநிலைக் கருத்து, மொழி, எண்ணிக்கை, பழக்க வழக்கங்கள் ஆகிய துறைகளில், பல்வேறு பாலர் கல்வி நிறுவனங்கள் கற்பித்து, குழந்தைகளைப் பயிற்றுவிக்கின்றன.
சீனாவில் 3 வயது முதல் 6 வயது வரையான குழந்தைகளைப் பாலர் பள்ளிகள் ஏற்றுக்கொள்கின்றன. வயதில் மேலும் இளைய குழந்தைகளை சில பாலர் பள்ளிகள் ஏற்றுக்கொள்கின்றன. தற்போது, சீனாவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பாலர் பள்ளிகள் உள்ளன. பள்ளி செல்லும் வயதுக் குழந்தைகளில் 30 விழுக்காட்டினர் மட்டும், கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுகின்றனர். வயது, பொருளாதாரம் முதலிய காரணத்தினால், இதர குழந்தைகள் பெற்றோரின் பராமரிப்பு நிலையில் உள்ளனர்.
சீனாவில், அரசு பாலர் பள்ளி, தனியார் பாலர் பள்ளி என இரு வகைப்படுகின்றது. பெரும்பாலான அரசு பாலர் பள்ளிகள், நீண்டகால வரலாறுடையவை. போதனை அனுபவமும் முதிர்வான பாங்கும் கொண்டவை. கல்விக் கட்டணம் குறைவு. தனியார் பாலர் பள்ளியின் கல்வி கட்டணம் அதிகம். ஆனால், தனியார் பாலர் பள்ளி தனிச்சிறப்பு வாய்ந்தது. அன்றியும், சந்தையின் தேவைக்கிணங்க, போதனை உள்ளடக்கம், வழிமுறை முதலியவற்றை உரிய நேரத்தில் இது சரிப்படுத்த முடியும். சந்தைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், தனியார் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகரித்து வருகிறது. தற்போது, இது சுமார் 30 விழுக்காடு வகிக்கின்றது.

1 2 3 4 5 6