பள்ளிக்குப் புறம்பான கல்வி
பள்ளிக் கல்வியைத் தவிர, சீனாவில் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிக்குப் புறம்பான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வரும் சீனர், இந்நிறுவனங்களைப் பயன்படுத்தி, தமது அறிவைப் பெருக்கும் விருப்பத்தை நிறைவு செய்வதில் மிகவும் கவனம் செலுத்துகின்றனர்.
இத்தகைய நிறுவனங்களில் இளைஞர் மற்றும் குழந்தைகள் மாளிகை, நடவடிக்கை மையம், வகுப்புக்குப் பிந்திய விரிவுரை வகுப்பு, ஆன்லைன் போதனை ஆகியவை அடங்கும். தமது பொழுதுபோக்கு மற்றும் தேவைக்கிணங்க, சீன இளைஞர்களும் குழந்தைகளும் இசை, ஆடல், ஓவியம் ஆகியவற்றை கற்றுக்கொண்டு, ஒப்பனைக் கல்வி பெற்று, பல்வகை அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் கலந்து கொள்கின்றனர். இவை, அவர்களின் திறனை அதிகரித்து, வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளன.

1 2 3 4 5 6