தொடக்கப் பள்ளிக் கல்வ
6 வயது குழந்தைகள், தொடக்கப் பள்ளிக் கல்வியைப் பெறுகின்றனர். சீனக் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, பள்ளி செல்லும் வயதுக் குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வியை சீனா அளிக்கிறது.
சீனாவில் தொடக்கப் பள்ளிக் கல்வி பெரும்பாலும் 6 ஆண்டு நீடிக்கின்றது. சீன மொழி, கணிதம், அறிவியல், அன்னிய மொழி, நல்லொழுக்கம், இசை, விளையாட்டு ஆகியவை பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. புதிய புள்ளி விபரங்களின் படி, தற்போது, சீனாவில் 4 லட்சம் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை 12 கோடியாகும். ஒத்த வயதினர் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் விகிதம் 98 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
கட்டாயக் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படும் பெரும்பாலான பள்ளிகள் அரசுக்கு உரியவை. நியாயமான கட்டாயக் கல்வியை மாணவர் பெறும் வகையில், பலவீனமான பள்ளிகளின் கற்பித்தல் வசதியை மேம்படுத்துவதில், சீனக் கல்வி வாரியங்கள் பாடுபட்டு வருகின்றன. அத்துடன், கிராமப்புறங்களில் செறிவான முறையில் கல்வியை அளித்து, நல்ல வசதியுடைய மையப் பள்ளிகளில் குழந்தைகளை அணி திரட்டுகின்றன. மாணவர்கள் அங்கு தங்கி கல்வி பயில்கின்றனர்.

1 2 3 4 5 6