• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கல்வி அமைப்பு முறை]

உயர் நிலைக் கல்வி

சீனாவின் உயர் நிலைக் கல்வி, டிப்ளமோ, பட்டம், முதுகலை, டாக்டர் பட்டம் ஆகிய நிலைகளில் அமைகின்றது. உயர் கல்வி நிலையங்களில், சாதாரண உயர் கல்வி நிலையங்கள், உயர் நிலைச் சிறப்புத் தொழில் பள்ளிகள், வானொலி-தொலைக்காட்சிப் பல்கலைக்கழகங்கள், வயதுவந்தோருக்கான உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

சீனாவின் உயர் நிலைக் கல்வி சுமார் 100 ஆண்டு வரலாறுடையது. புதிய புள்ளி விபரங்களின் படி, தற்போது சீனாவில் 3000 உயர் கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றில், மூன்றில் இரண்டு பகுதி அரசுக்கு உரியது; ஒரு பகுதி அரசு சாராதது. உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர் எண்ணிக்கை 2 கோடியை எட்டியுள்ளது. ஒத்த வயதினர் உயர் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் விகிதம் சுமார் 17 விழுக்காடாகும்.

சீனாவில் உயர் கல்வி நிலையங்களில் செர்வதற்கு நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் சுய விருப்பம் மற்றும் மதிப்பெண்ணுக்கிணங்க, போட்டித் தேர்வு மூலம் மாணவர்களை உயர் கல்வி நிலையங்கள் சேர்க்கின்றன. சீனக் கல்வித் துறை அல்லது பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் நுழைவுத் தேர்வுக்கு ஒரே மாதிரி கேள்வித் தாளை அளித்து, சேர்க்கைக்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணை உறுதிப்படுத்துகின்றன.

சீனாவில், புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் அரசுக்குரியவை. அரசு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோர் தனியார் பல்கலைக்கழகம், வானொலி-தொலைக்காட்சிப் பல்கலைக்கழகம், வயதுவந்தோருக்கான உயர் கல்வி நிலையம் ஆகியவற்றில் சேர்கின்றனர்.

சீனக் கல்வி வாரியங்கள் கடந்த 2 ஆண்டுகளில், உயர் நிலைக் கல்வியை பெரிதும் வளர்ச்சியுறச்செய்து வருகின்றன. அரசு பல்கலைக்கழகங்கள் சேர்த்துக் கொள்ளும் மாணவர் எண்ணிக்கை, பெருமளவில் அதிகரித்துள்ளது. 


1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040