சீனியர் பள்ளிக் கல்வி
இது, ஜூனியர் பள்ளிக் கல்விக்கு பிந்தியது. இதில் சாதாரண சீனியர் பள்ளிக் கல்வி, சீனியர் தொழில் கல்வி, இடைநிலை சிறப்புத் தொழில் கல்வி ஆகியவை அடங்கும். இதில் கல்விக் கட்டணத்தை மாணவர் செலுத்த வேண்டும். பல்வேறு இடங்களின் பொருளாதார நிலைமைக்கேற்ப, மாணவர் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மாறுபடுகிறது. தற்போது ஆண்டுக்கு சில ஆயிரம் யுவான் செலுத்த வேண்டும்.
சீனியர் பள்ளி கல்வி 3 ஆண்டு நீடிக்கிறது. முக்கிய பாடத்திட்டங்களில், சீன மொழி, கணிதம், அன்னிய மொழி, இயற்பியல், வேதியியல், உயிரியல், தகவல் அடங்கும். இத்தகைய பள்ளிகளில் பெரும்பாலானவை அரசால் நடத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் தனியார் சீனியர் பள்ளிகளும் தோன்றியுள்ளன.
சீனாவில், ஜூனியர் பள்ளியிலிருந்து சீனியர் பள்ளிக்குச் செல்ல நுழைவுத் தேர்வு உண்டு. சுய விருப்பம், தேர்வில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றுக்கேற்ப, போட்டித் தேர்வு மூலம் மாணவர்களை சீனியர் பள்ளி தெரிவு செய்கின்றது. பல்வேறு இடங்களைச் சேர்ந்த கல்வி வாரியங்கள் ஒரே மாதிரியான கேளிவித்தாளை அளித்து, சேர்க்கைக்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணை உறுதிப்படுத்துகின்றன. புதிய புள்ளி விபரங்களின் படி, தற்போது சீனாவில் 30 ஆயிரம் சீனியர் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 3 கோடி மாணவர் பயில்கின்றனர். ஒத்த வயதினர் சீனியர் பள்ளிக்குச் செல்லும் விதிதம் 40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
அதிகமான மாணவர்களின் கல்வி பெறும் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில், சீனியர் பள்ளிக் கல்வியை சீனக் கல்வி வாரியங்கள் பெரிதும் வளர்ச்சியுறச்செய்து வருகின்றன.

1 2 3 4 5 6