ஜூனியர் பள்ளிக் கல்வி
சீனாவில் ஜூனியர் பள்ளிக் கல்வி, கட்டாய இலவசக் கல்வியாகும்.
இது பெரும்பாலும் 3 ஆண்டு நீடிக்கின்றது. சீன மொழி, கணிதம், அன்னிய மொழி, இயற்பியல், வேதியியல், நல்லொழுக்கம், தகவல் ஆகியவை முக்கிய பாடத்திட்டங்களாகும். புதிய புள்ளி விபரங்களின் படி, தற்போது சீனாவில் 60 ஆயிரம் ஜூனியர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 6 கோடி மாணவர் கற்கின்றனர். ஒத்த வயதினர் ஜூனியர் பள்ளிக்குச் செல்லும் விதிதம் 90 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. பெரும்பாலான ஜூனியர் பள்ளிகள் அரசு பள்ளிகளாகும்.
கட்டாயக் கல்வி முறை நடத்தப்படுவதால், தொடக்கப் பள்ளியிலிருந்து ஜூனியர் பள்ளிக்குச் செல்ல, நுழைவுத் தேர்வு தேவை இல்லை. மாணவர் பயிலும் தொடக்கப் பள்ளியின் இடம், மாணவரின் விருப்பம் ஆகியவற்றுக்கிணங்க, மாணவர் பயிலும் ஜூனியர் பள்ளியைக் கல்வி வாரியங்கள் உறுதிப்படுத்துகின்றன.
பல்வேறு இடங்களின் கல்வி மூலவளத்தைக் கூட்டாக அனுபவிப்பது என்ற குறிக்கோளை நனவாக்கும் வகையில், கல்வி தகவல் மயமாக்கத்தை முன்னேற்றுவித்து, தொலைதூரக் கல்வியை வளர்ச்சியுறச்செய்திட, சீனா பாடுபட்டு வருகிறது.

1 2 3 4 5 6