• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முதலீட்டுச் சூழ்நிலை]
அடிப்படை வசதியின் கட்டுமானம்

நெடுஞ்சாலை

பரந்தளவிலான நிலப்பரப்பு கொண்ட நாடு சீனா. போக்குவரத்து வசதியானது. இவற்றுள், மேற்கிலிருந்து கிழக்கிற்குச் செல்லும் 5 நெடுஞ்சாலைகள், வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் 7 நெடுஞ்சாலைகள் ஆகிய 12 முக்கிய உயர் தர நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய முதுகெலும்பாகியுள்ளன. அவற்றின் மொத்த நீளம் 35 ஆயிரம் கிலோமீட்டராகும்.

நெடுஞ்சாலைக் கட்டுமானத்தை அடிப்படை வசதியின் முக்கிய பகுதியாக சீனா கருதுகின்றது. 1998 முதல் 2001 வரையான 4 ஆண்டுகளில், இத்துறையில் 20 ஆயிரம் கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. 2002ஆம் ஆண்டு, மேலும் 30 ஆயிரம் கோடி யுவான் இதில் முதலீடு செய்யப்பட்டது. 67 ஆயிரம் கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இதில் 5700 கிலோமீட்டர் உயர் வேக நெடுஞ்சாலையாகும். 2003ஆம் ஆண்டு, மேலும் 36 ஆயிரம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டின் இறுதி வரை, முழு நாட்டில் 18 இலட்சம் கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இவற்றில் நவீன போக்குவரத்து வளர்ச்சியின் தரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் வேக நெடுஞ்சாலையின் நீளம் 40 ஆயிரம் கிலோமீட்டராகும். அதேவேளையில், நடு மற்றும் மேற்குப் பகுதியிலான நெடுஞ்சாலைக் கட்டுமானத்தையும் அரசு விரைவுப்படுத்தியதால், அங்குள்ள போக்குவரத்து வசதி பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2008க்குள், சீனத் தேசிய நெடுஞ்சாலையின் முதுகெலும்புத் தொகுதியானது முற்றிலும் கட்டியமைக்கப்படவுள்ளது. அப்போது, உயர் நிலை நெடுஞ்சாலைகளின் மூலம், பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட அனைத்து மாநகரங்கள் மற்றும் மாநிலங்களும், தன்னாட்சிப் பிரதேசங்களின் தலைநகரங்களும், இணைக்கப்படவுள்ளன. இவ்வாறு இணைக்கப்படும் நகரங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டக்கூடும்.

இருப்புப்பாதை

2003ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் மொத்தம் 73 ஆயிரம் கிலோமீட்டர் நீள இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. சீனாவின் முதலாவது கடல் கடந்த இருப்புப்பாதையான யோ காய் இருப்புப்பாதை 2003ஆம் ஆண்டு ஜனவரி 7ந் நாள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயர்வான சிங்காய் திபெத் இருப்புப்பாதையின் மொத்த நீளம் 1142 கிலோமீட்டராகும். இதன் கட்டுமானம் 2006ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். தற்போது, உலகில் இருப்புப்பாதை மூலம் அதிக அளவு சரக்குகளை ஏற்றிச்செல்லும் நாடாக சீனா திகழ்கின்றது. இந்த அளவு பெரிதும் அதிகரிக்கும் நாடாகவும், ஏற்றிச்செல்லும் வசதியை மிகவும் அதிகமாக பயன்படுத்தும் நாடாகவும் சீனா விளங்குகின்றது.

1998ஆம் ஆண்டு முதல், சீனாவில் தொடர்வண்டியின் வேகம் பல முறை அதிகரித்துள்ளது. தற்போது, பெரும்பாலான தொடர்வண்டிகள் இரவில் புறப்பட்டு காலையில் சென்றடைகின்றன. மக்களின் பயணத்துக்கு இது வசதி வழங்கியுள்ளது.

துறைமுகம்

நிலக்கரி, கொள் கலன், தானியம் முதலியவற்றை ஏற்றி இறக்கல் தொகுதியைக் கட்டியமைப்பதானது, கடலோர துறைமுக கட்டுமானத்தின் முக்கிய நோக்காகும். குறிப்பாக, கொள் கலன் ஏற்றி இறக்கல் தொகுதியின் கட்டுமானத்தைச் சீனா வலுப்படுத்தியுள்ளது. தாலியன், டியான் ஜின், சிங்தௌ, ஷாங்காய் நிங்பௌ, சியா மன், சென்சென் முதலிய துறைமுகங்களில் ஆழ்ந்த நீர் கொள் கல கப்பல் தங்கும் துறையை அமைத்துள்ளது. இது மட்டுமல்ல, நிலக்கரியை ஏற்றிச்செல்லும் தொகுதியின் கட்டுமானமும் வலுப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டின் இறுதி வரை, துறைமுகங்களில் கப்பல் தங்கும் இடங்களின் மொத்த எண்ணிக்கை 1800 ஆகும். அவற்றில் 10 ஆயிரம் டன் எடையுடைய கப்பல் தங்கும் இடங்களின் எண்ணிக்கை 530க்கு மேலாகும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு 170 கோடி டன்னுக்கும் அதிகமாகும். சில பெரிய துறைமுகங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு ஆண்டுக்கு 10 கோடி டன் அளவைத் தாண்டியுள்ளது. ஷாங்காய், சென்சென், சிங்தௌ, டியான் ஜின், குவாங் சௌ, சியா மன், நிங் பௌ, தா லியன் ஆகிய 8 துறைமுகங்கள் உலகில் மிகப் பெரிய 50 கொள் கலன் துறைமுகங்களில் சேர்ந்துள்ளன.

பயணி விமானத் துறை

சீனாவிலிருந்து உலகின் பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் செல்ல முடியும். சீனாவில் 140க்கு அதிகமான விமான நிலையங்கள் இருக்கின்றன. முறைப்படியான விமான நெறிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவற்றில், சர்வதேச விமான நெறிகள் 160க்கு மேலாகும். இவை 30க்கு அதிகமான நாடுகளின் 60க்கு மேற்பட்ட நகரங்களுக்குச் செல்கின்றன.

தொலைபேசி

2003ஆம் ஆண்டு, சீனாவில் தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 26 கோடியைத் தாண்டியுள்ளது. இதில், நகரங்களில் தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17 கோடியாகும். கிராமப்புறத்தில் 9 கோடியே 20 இலட்சத்து 13 ஆயிரமாகும். 1987ஆம் ஆண்டில், செல்லிடபேசியை சீனா அறிமுகப்படுத்தியது. 1990ஆம் ஆண்டுக்கு பின், இத்தொழில் வேகமாக வளர்ந்து வருகின்றது. ஆண்டு அதிகரிப்பு வேகம் 100 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. 2003ஆம் ஆண்டு, செல்லிட பேசி வலைப்பின்னல் நாட்டின் அனைத்து நடுத்தர மற்றும் பெரிய நகரங்களிலும் 2000க்கு அதிகமான சிறிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களிலும் இயங்கியுள்ளது. செல்லிட பேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 27 கோடியை எட்டியுள்ளது. செல்லிட பேசி மற்றும் தொலைபேசி பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 53 கோடியைத் தாண்டியுள்ளது. நூறு பேரில் 42 பேர் தொலைபேசி அல்லது செல்லிட தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்.

இணையம்

தற்போது, சீனாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடியை எட்டியுள்ளது.

புள்ளிவிவரங்களின் படி, சீனாவில் வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரம் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகில் 3வது இடம் வகிக்கின்றது. 2001ஆம் ஆண்டின் பிற்பாதி முதல், சீனாவில் இணைய தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை சுமார் 3 இட்சம் இணையதளங்கள் சீனாவில் இருக்கின்றன. Opital fiber cable முக்கியமாகவும், செயற்கைக் கோள், digital microwave ஆகியவற்றைத் துணையாகவும் கொண்ட அதிக திறனுடைய, உயர் வேக தொடரமைப்பை சீனா முழுவதிலும் பரவலாகியுள்ளது. 2003ஆம் ஆண்டு இறுதி வரை, சீனாவில் Opital fiber cableஇன் மொத்த நீளம் 27 இலட்சம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. கடலோரப் பிரதேசங்களிலும் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் வளர்ச்சி அடைந்த பிரதேசங்களிலும், கிராமப்புறம், குடியிருப்பு பிரதேசம், கட்டிடம் ஆகியவற்றில் இது பரவலாகியுள்ளது. தகவலைப் பரிமாற்றும் முக்கிய வழிமுறையாக இது மாறியுள்ளது. தற்போது, தரவு பரிமாற்ற வலைப்பின்னல், எண்ணியல் தரவு பரிமாற்ற வலைப்பின்னல், கணிணி இணையம், multimedia செய்தி வலைப்பின்னல் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட பொதுத் தரவு செய்தி வலைப்பின்னல் பூர்வாங்க ரீதியில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட நகரங்களில் அது இயங்குகின்றது. செய்திகள் பரிமாற்ற ஆற்றல் 6.1 இலட்சம் port எட்டியுள்ளது. உலகில் மிக பெரிய செய்தி வலைப்பின்னல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040