• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முதலீட்டுச் சூழ்நிலை]

முதலீட்டுக் கொள்கை

உலகில் மிக அதிகமான வெளிநாட்டு முதலீட்டைஈர்க்கும் நாடுகளில் சீனா ஒன்றாகும். பல்வகை முன்னுரிமையுடைய நியாயமான முதலீட்டுக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்துவதானது, உலகில் பொருளாதாரம் தாழ்ந்த நிலையில் இருந்து, சர்வதேச முதலீட்டுத் தொகை பெருமளவில் குறையும் நிலைமையில், சீனா பெரும் சாதனை பெறுவதற்கான முக்கிய காரணம் ஆகும்.

1980ஆம் ஆண்டுகளின் துவக்கம் முதல், மனித ஆற்றல், பொருள், நிதியம் ஆகியவற்றை சீனா பயன்படுத்தி, அதிகமான அடிப்படை வசதிகளைத் தொடர்ச்சியாகக் கட்டியமைத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவில் தொழில் நிறுவனங்களை நடத்துவதற்குச் சிறந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்ல, 500க்கும் அதிகமான வெளிநாட்டுப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளை சீனா வகுத்து, சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சட்டத் துறையிலான பாதுகாப்பு வழங்கியுள்ளது. 1997ஆம் ஆண்டின் இறுதியில், வெளிநாட்டு வணிகர்கள் தொழில்களில் முதலீடு செய்வதற்கான வழிக்காட்டல் நிகழ்ச்சி நிரலை சீனா திருத்தி வெளியிட்டு, வேளாண் துறையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி, எரியாற்றல், போக்குவரத்து, முக்கிய மூலபொருட்கள், உயரிய புதிய தொழில் நுட்பம், மூலவளத்தின் ஒட்டுமொத்தப் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் வெளிநாட்டு வணிகர்கள் முதலீடு செய்வதற்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்கின்றது. உலக வர்த்தக அமைப்பின் விதி மற்றும் சீனாவின் வாக்குறுதிக்கிணங்க, கிட்டத்தட்ட 2300 சட்ட ஆவணங்களை சீனா சரிப்படுத்தியுள்ளது. இவற்றுள் 830 நீக்கப்பட்டு, 325 திருத்தப்பட்டுள்ளது. சீனாவும் வெளிநாடும் கூட்டாக முதலீடு செய்து இயங்கும் தொழில் நிறுவனம் பற்றிய சட்டம், சீனாவும் வெளிநாடும் ஒத்துழைத்து இயங்கும் தொழில் நிறுவனம் பற்றிய சட்டம், வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனம் பற்றிய சட்டம் ஆகிய 3 அடிப்படைச் சட்டங்களையும் நடைமுறை விதிகளையும் முக்கியமாக கொண்ட வெளிநாட்டு முதலீடு பற்றிய சட்ட அமைப்புமுறை அடிப்படையில் உருவாகியுள்ளது. 2003ஆம் ஆண்டின் இறுதி வரை, மொத்தம் 170க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வணிகர்கள் சீனாவில் முதலீடு செய்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகின் மிக பெரிய 500 கூட்டு நிறுவனங்களில் அனைத்தும் சீனாவில் முதலீடு செய்கின்றன. உலகில் தலைசிறந்த முதலீட்டுச் சூழ்நிலை உடைய நாடு — சீனா என சர்வதேச முதலீட்டாளர்களும் நாணயத் துறையினரும் மதிப்பிடுகின்றனர்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040