• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முதலீட்டுச் சூழ்நிலை]

தேசிய நிலை உயரிய புதிய தொழில் நுட்ப பிரதேசம்

தற்போது, 50க்கும் அதிகமான தேசிய நிலை உயரிய புதிய தொழில் நுட்ப பிரதேசங்கள் சீனாவில் இருக்கின்றன. 600க்கும் மேற்பட்ட மாநில நிலை அறிவியல் ஆய்வு சாதனைகள் இவற்றில் தொழிலாக மாறியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், சீனாவில் உயரிய புதிய தொழில் நுட்ப வளர்ச்சி பிரதேசங்களின் முக்கிய பொருளாதாரக் குறியீட்டு எண் ஆண்டுக்கு சராசரியாக 60 விழுக்காடு என்ற அதிகரிப்பு விகிதத்தை நிலைநிறுத்தியுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் முக்கிய ஆற்றலாக இது மாறியுள்ளது.

பெய்ஜிங் சுன் குவான் சுன் அறிவியல் தொழில் நுட்ப பூங்காவும், தியேன் சின், ஷாங்காய், கெய் லுங்சியங், ச்சியாங் சு, ஆன் குய் முதலிய மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் அமைந்துள்ள தேசிய உயரிய புதிய தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசங்களும், விரைவாக வளர்ந்து வருகின்றன. சூழ்நிலை சீராக இருக்கின்றது. உயரிய புதிய தொழிப் நுட்ப உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி விரைவாக அதிகரித்து வருகின்றது. ஆகையால், நாட்டின் முதலாவது தொகுதி ஏற்றுமதி தளங்களாக அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சு சியான் கழிமுகம், யாங்சி ஆற்றின் கழிமுகம், பெய்ஜிங் மற்றும் சியேன் சின் பிரதேசம் ஆகியவற்றின் உயரிய புதிய தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொகை முழுநாட்டின் இத்தகைய தொகையில் 80 விழுக்காட்டுக்கு மேலாகும். 2002 ஆம் ஆண்டில், உயரிய புதிய தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொகை, மொத்த வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதியில் 20 விழுக்காடாகும். சீனாவின் வெளிநாட்டு ஏற்றுமதி கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040