• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முதலீட்டுச் சூழ்நிலை]

சிறப்புப் பொருளாதாரப் பிரதேசங்களும் கடலோர வெளிநாட்டுத் திறப்பு நகரங்களும்

1978ஆம் ஆண்டு பொருளாதார அமைப்புமுறையில் சீர்திருத்தம் செய்யும் முடிவை மேற்கொண்ட போது, திட்டமாகவும், முறைப்படியாகவும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை சீன அரசு மேற்கொள்ள துவங்கியுள்ளது. 1980ஆம் ஆண்டு முதல், குவான் துங் மாநிலத்தின் சென்ச்சென், சூ காய், சென் து, பூஜியேன் மாநிலத்தின் சியா மன், காய் நான் மாநிலம் முதலியவற்றில் 5 பொருளாதார சிறப்பு பிரதேசங்களைச் சீனா நிறுவியது. 1984ஆம் ஆண்டு, தா லியன், சின் குவான் தௌ, தியேன் சின், யிஆன் தெ, சிங்தௌ லியன், யூ காங், நான் துன், ஷாங்காய், நின் போ, வென் சௌ, பஃ சௌ, குவான் சௌ, சான் சியான், பெய் காய் ஆகிய 14 கடலோர நகரங்கள் வெளிநாட்டுக்குத் திறந்துவிடப்பட்டன. 1985இல், யாங்சி ஆற்றின் முகத்துவாரம், சூ சியான் ஆற்றின் முகத்துவாரம், மி நான் பிரதேசம், சான் துன் தீபகற்பம், லியௌ துன் தீபகற்பம், ஹௌ பெய், குவான் சி முதலியவை பொருளாதார திறப்பு பிரதேசமாக மாறியுள்ளன. இதனால், கடலோர பொருளாதார திறப்புப் பிரதேசம் உருவாக்கியுள்ளது. 1990இல், ஷாங்காய் புதிய பு துன் பிரதேசத்தை திறந்து வைத்து, வளர்ப்பதென சீன அரசு முடிவு செய்தது. மேலும் யாங்சி ஆற்றின் ஒரு தொகுதி கரையோர நகரங்களும் திறந்து விடப்பட்டன. இதனால், பு துன்னைத் தலைமையாகக் கொண்ட யாங்சி ஆற்றுத் திறப்புப் பிரதேசம் உருவாகியுள்ளது. 1992ஆம் ஆண்டில், சில எல்லைப்புற நகரங்களையும் மாநில மற்றும் தன்னாட்சிப் பிரதேச தலைநகரங்கள் அனைத்தையும் திறந்துவிடுவதென சீன அரசு முடிவு செய்துள்ளது. சில நடுத்தர மற்றும் பெரிய நகரங்களில் 15 வரியற்ற பிரதேசங்கள், 49 தேசிய நிலை பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசங்கள், 53 உயர் மற்றும் புதிய தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசங்கள் ஆகியவை நிறுவப்பட்டன.

இந்தப் பிரதேசங்களில், வேறுபட்ட முன்னுரிமையுடைய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதால், வெளிநாட்டுத் திறப்பு பொருளாதாரத்தை வளர்ப்பது, ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி பெறுவது, முன்னேறிய தொழில் நுட்பத்தை உட்புகுத்துவது ஆகியவற்றில் இதர பிரதேசங்களுக்கு முன் மாதிரி வழங்கியுள்ளது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040