• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முதலீட்டுச் சூழ்நிலை]

தேசிய நிலை பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசம்

பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசமானது சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு பிரதேசங்களின் உள்ளடக்கமாகும். வெளிநாட்டுத் திறப்பு நகரத்தில் குறிப்பிட்ட இடத்தை வகுத்து, மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகளை முக்கியமாகக் கட்டியமைத்து, சர்வதேச தரத்துக்கேற்ற முதலீட்டுச் சூழ்நிலையை உருவாக்குகின்றது. வெளிநாட்டு முதலீட்டை உட்புகுத்திப் பயன்படுத்தி, உயரிய புதிய தொழில்நுட்பத் தொழிலை முக்கியமாகக் கொண்ட நவீன தொழில் துறை கட்டமைப்பைக் கட்டியமைத்து, இந்நகரம் மற்றும் இதனை ஒட்டியமைந்துள்ள பிரதேசத்தின் வெளிநாட்டுப் பொருளாதார வர்த்தகத்தின் முக்கிய பிரதேசத்தை உருவாக்குகின்றது.

1988ஆம் ஆண்டு, வெளிநாடுகளுக்குத் திறந்து வைக்கப்பட்ட கடலோர நகரங்களில், தாலியன், டியான் ஜின், சிங்குவான் தௌ, யேன் தாய், சிந்தௌ, லியன் யூன் கான், நாந்தூன், மின் ஹாங், ஹுங்சியௌ, சௌ கு சிங், நின் பௌ, பூ சௌ, குவான் சௌ, சான் சியாங் ஆகிய 14 தேசிய நிலை பொருளாதார தொழில் நுட்பப் பிரதேசங்களை முதலில் கட்டியமைப்பதென அரசவை ஒப்புக்கொண்டது. இதுவரை, சீனாவில் இத்தகைய பிரதேசங்களின் எண்ணிக்கை 49 ஆகும். இவற்றில் 27 கிழக்கு கடலோர பிரதேசங்களில் அமைந்துள்ளன. 22 மத்திய மற்றும் மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. தவிர, சூ சியௌ தொழில் துறை மண்டலம், சிங் சௌ ஏற்றுமதி பதனீட்டு மண்டலம் முதலியவற்றைக் கட்டியமைக்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040