• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கட்டுக்கதைகள்]

ஹெஷி விலையுயர்ந்த ஆபரணக்கல்

சூ மாநிலத்தில் பியள் ஹெ எனும் ஒரு மனிதன் இருந்தான். அவன் மலையில் பட்டை தீட்டப்படாத விலையுயர்ந்த பெரிய ஆபரணக் கல் துண்டு ஒன்றை கண்டெடுத்தான். அதை லி அரசனிடம் சமர்ப்பித்தாந். அந்த அரசன் அதனை உடனடியாக பரீட்சிப்பதற்காக கல் தொழில் திறமையாளனிடம் அனுப்பினான். ஆனால் அந்த நிபுணனோ இது வெறும் சாதாரண கல் தான் என்று கூறிவிட்டான். அந்த அரசன் பியன் ஹெ ஒரு ஏமாற்றுக்காரன் எனக்கூறி மிக்க கோபமடைந்து பியனின் ஒரு காலை வெட்டும் படி கட்டளை யிட்டான். அதன் பிறகு விரைவிலேயே அரசன் லி இறந்து விட்டான். அரசன் ஊ பட்டம் சூடினான். கைகளில் கல்லோடு பியன் ஹெ புதிய அரசனிடம் சென்றான். அரசனால் அந்த பொக்கி வித்தையும் கல்லையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியும் என நினைத்தான்.

ஆனால், அவனுடைய கெட்டகாலம், முன்பு நடந்தமாதிரியே தகும்பவும் நடந்தது. அவன் மறு காலையும் இழந்தான்.

காலம் கடந்தது. அரசன் வூ இறந்தான். அரசன் வென் அரியணை ஏறியதைக் கேள்விப்பட்ட பியன் ஹெ, சூ மலையடிவாரத்திற்கு பட்டைசீட்டாத கல்லை கைகளில் எந்தியவாறு தவழ்ந்து சென்று, மனம் புண்பட்டு அழதான். மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவன் கண்ணீர் வெள்ளமாக நிந்காமல் அழுதான். கடைசியில் கண்ணீர் வர்றியது. இச்செய்தி அரசன் வென்னின் காதுகளை எட்டியதும் அவன் பியனின் ஆழ்ந்த துக்கத்திற்கான காரணத்தை அறிய அதிகாரிகளை அனுப்பினான்.

பியன் ஹெ துக்கத்துடன் கூறினான். "என்னை அதிகம் நோகச் செய்வது என்ன வென்றால் என் கால்களை இழந்தது அல்ல, ஆனால் எனக்கு அறியாயம் இழைக்கப்பட்டு விட்டது. விலைமதிப் பற்றி கல் எவனும் சாதாரணக் கல் என்று தவறுதலாக கருதப்பட்டது. என் விசுவாசத்தை தவறாக நினைத்து ஏமாற்றுக்காரன்"என்று கூறிவிட்டார்கள்.

பியன் ஹெஷி சொன்னதை, அரசனிடம் போய் கூறினார்கள். அடுத்து அக்கல்லை கவனமாக பட்டைசீட்டும் படி கல் திறமையாளனுக்கு அரசன் கட்டளையிட்டான்.

அக்கல் உலகத்திலேயே அழகான கல்லாக மாறியது. பியன் ஹெயை புகழ்ந்து வெகுமதி பெயர் சூட்டப்பட்டு, ஹெ ஷி கல் என்று அழைக்கப்பட்டது.

இக்கதையூடாக, இதன் எழுத்தாளரான பெய் எனும் தத்துவவாதி போரிடும் மாகாண்ங்கள் காலத்தில் சொந்த அரசியல் பின்னடைவுகளை சாடையாகச் சொல்கிறார். கூடவே இது தலைவர்களுக்கு அவர்களின் மக்களுடைய மறைந்திருக்கும் திறமைகளை தெரிந்து கொள்ள வேண்டியதையும் நாபகப்படுத்துகிறது.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040