• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கட்டுக்கதைகள்]

வடக்கே செல்லும் போது தெற்கே நோக்குதல்

சீனாவில் போரிடும் மாகாணங்களின் காலமான கி.மு.500-300க்கும் இடையில் மேலாதிக்கத்தை பெறுவதற்கான குறு நில மன்னர்கள் அடிக்கடி கோர் புரிந்தனர். வெய் அரசனுக்கும் மேலாதிக்க ஆசை வந்தது. அவன் முதலில் யான் என்று அழைக்கப்படும் இன்னொரு தேசத்தின் தலைநகரை கைப்பற்ற விரும்பினான். இந்த செய்தியைக் கேட்டு, இன்னொரு தேசத்திற்குப் பயணமாகச் சென்ற அவனுடைய அமைச்சர் ஜி லியாங் இதைக் கேட்டு அவசரமாக ஊருக்குத் திரும்பினான்.

அவன், வெய் அரசனுக்கு சில விந்தையான சம்பவங்கள் பற்றி சொன்னான். "நான் வழியில் ஒரு விநோதமான பயணியைச் சந்தித்தேன். அவரின் வண்டி வடக்கு நோக்கிச் சென்றது. நான் அவரை எங்கே போய் கொண்டிருக்கின்றீர்கள் எனக் கேட்டேன். அந்த மனிதன் சு தேசத்திற்கு சென்று கொண்டிருப்பதாக கூறினான். இது ஆச்சிரியமாக இருந்தது. சு தெற்கில் இருக்கிறது வண்டி வடக்கு நோக்கி போகிறதே என கேட்டேன். அதனால் என்ன?எனது குதிரை மிக வேகமானது. இது மிக வேகமாக ஓடுகின்றது"என பிடிவாதமாக விடைபகர்ந்தான்.

"குதிரை வேகமாக ஓடுகின்றது என்பது பெரிய விஷயம் அல்ல. நீர் வடக்கு நோக்கி போய்க் கொண்டிருந்தால் ஒரு போதும் சு தேசத்தை அடைய முடியாது எனக் கூறினேன்.""நான் போதியளவு பணத்துடன் வந்திருக்கின்றேன்"என அவன் பதிலளித்தான். பிரச்சினை தேசத்துக்கு போகும் வழி இது இல்லை என்பதாகும் என நான் கூறினேன். அதனால் என்ன நான் நன்றாக ஓட்டுவேன் என்று அதிக வரட்டுத் தனமாக பதில் கூறினான். தொடர்ந்து வடதிசையில் சென்றான். வேடிக்கை மனிதனின் கதையினால் வெய் அரசன் களிப்படைந்தான். பின்னர் ஜி லியாங், மேதரு மன்னரே. நீங்கள் மேலாதிக்கத்தை அடைய விரும்பினால் முதலில் உலகத்தின் மதிப்பைப் பெற வேண்டும். இப்போது உங்களுடைய படை பலத்தால் யான் நிலத்தை கைப்பற்றினால் நீங்கள் உங்களுடைய இலாக்கில் இருந்து விலகுவீர்கள். அந்த பயணிக்கும் உங்களின் நடத்தைக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

கொள்கைக்கு நேர்மாறாகச் செயல்படுகிறவர்களை விவரிப்பதற்காக தெற்கே செல்வதற்காக வடதிசையில் பயணம் செய்வது என்ற பழமொழி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.


1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040