• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கட்டுக்கதைகள்]

யார் அழகு?

ச்சி என்ற இராச்சியத்தில் ஸோ ஜி என்ற முதலமைச்சர் அழகானவர் என்ற புகழ்பெற்று இருந்தார். சு கொங் என்ற இன்னொருவரும் அதே நகரத்தில் கவர்ச்சியானவராகத் திகழ்ந்தார். ஒரு நாள் காலையில் ஒப்பனை செய்த பின்னர் ஸோ ஜி கண்ணாடியில் தன்னை உற்றுப்பார்த்துக் கொண்டே தனது மனைவியிடம் "யார் அழகு?நானா?அல்லது சு கொங்கா?"எனக் கேட்டான். "நீங்கள் தான் அதிகம் அழகானவர், உங்களுக்கு முன்னால் சு கொங் ஈடுகொடுக்க முடியாதே"என அவள் பதிலளித்தாள்.

ஸோ ஜி முழுமையாக திருபதி அடையாமல் இதே கேள்வியை தனது வைப்பாட்டியிடம் கேட்டான்.

"நீங்கள் தான் மிக அழகானவன்"என அவள் பதிலளித்தாள்.

இரண்டாம் நாள் ஸோ ஜியின் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்தார். "யார் மிக அழகு?என நீ நினைக்கிறாய்"என்ற அதே கேள்வியை விருந்தினரிடம் கேட்டான். "உன்னைப் போல சு கொங் அந்தளவுக்கு அழகானவன் அல்ல"என விருந்தாளி பதிலளித்தான். பின்னர், ஒருநாள், சு கொங் தற்செயலாக அவனைப் பார்ப்பதற்கு அவனுடைய வீட்டுக்கு வந்தான்.

அவனுடைய முகத்தை ஸோ ஜி நன்றாகப் பார்த்தான். தன்னை விட சு கொங் எவ்வளவோ அழகாக இருப்பதாக உணர்ந்தான். கடைசியில் அவனுக்கு ஒருவிஷயம் புரிந்தது. "என் மனைவி என்னைக் காதலிப்பதால் அவருக்கு நான் அழகானத்தெரிந்தேன். வைப்பாட்டியோ எனக்குப் பயந்தாள். விருந்தினருக்கோ என்னால் ஏதோ சலுகைகிடைக்க வேண்டும். அகவே யாருமே உண்மை செல்ல வில்லை".

ஒருவர் தனது குறைகளை சொந்த அறிவினாலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்பது இந்த கதையின் கருத்து.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040