• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கட்டுக்கதைகள்]

தேவையற்ற பரிவு

அராபியன் இரவுகளும் மற்றும் மீவைனும் சாத்தானும் எனும் கதை நமக்கு மிகவும் நன்றாக தெரியும். இதைப் போன்ற சீனாவின் கட்டுக்கதை ஒன்று மாஸ்டர் தொங்குவாவும் ஜொங்ஷானின் ஓநாயும் அல்லது தேவையற்ற பரிவு என அழைக்கப்படுகிறது.

மாஸ்டர் தொங்குவா ஒரு கல்வியறிவு மிக்க ஆசிரியர். மொகிவுத்தைப் பின்பற்றுபவர், துன்பப்படும் எவருக்கும் உதவ தயாராக இருப்பவர் யாராக இருந்தாலும், விளைவு பற்றி அக்கறையில்லாமல் உதவக் கூடியவர். ஒரு நாள் ஜொங்ஷான் மலை வழியாகச் சென்ற போது, தற்செயலாக காயப்பட்ட ஓநாய் ஒன்றை வேடர்கள் துரத்தி செல்வதைக் கண்டார்.

அந்த ஓநாய் தனக்கு மாஸ்டரிடம் கெஞ்சிக் கேட்டது. மொகின்ற் வேதாந்தமான உலகலாவிய கோழமை என்பதன் படி நடக்க ஒரு சந்தாப்பமாக அந்த வயதான மனிதர் இதனை எடுத்துக் கொண்டார். வேடர்களின் கோபத்திற்கு உள்ளாகும் ஆபத்தான நிலையிலும், அவர் தனது பயணப்பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்து ஓநாயை உள்ளே வைத்தார். அப்பொழுது வேடர்கள் வந்து அவரிடம் ஒரு ஓநாயைக் கண்டீர்களா என விசாரித்தனர். மாஸ்டர் தொங்குவா தான் வழமைக்கு மாறாக எதையும் காணவில்லை எனப் பொய் கூறினார். அந்த வேடர்கள் அதிவேகமாக நகர்ந்தனர்.

எப்படியிருந்த போதும், அந்த ஓநாய் பையை விட்டு வெளியே வந்ததும் தன்சுய புத்தியைக் காட்டியது. அது கூறியது, எனக்குப் பசிக்கிறது என்றும் மாஸ்டர் இரக்க முன்வைராக இருப்பதால் தன்னையே உணவாகத் தர வேண்டும் என்று கேட்டது. உடனே, மாஸ்டர் தொங்குவா ஓடத் தொடங்கினார். அப்பொழுது, ஒரு விவசாயி அவ்வழியால் வந்து என்ன விஷயம் எனக் கேட்டார். மாஸ்டர் தொங்குவாயும் ஓநாயும் முறையே தம் வாதங்கலைக் கூறி, தமக்கு ஓர் தீர்ப்பையும் வழங்கக்கேட்டனர். சில நோடகளிலேயே அவ்விவசாயி நிலைமைகளை புரிந்து கொண்டு, கூறினார். "நீங்கள் இருவரும் கூறிய கதையை என்னால் நம்பமுடிய வில்லை. இந்தப் பை மிகவும் சிறியது. எப்படி மாஸ்டர் ஓநாய் இதற்குள் போயிருக்க முடியும்?இதை எனக்கு செய்து காட்ட முடியுமா?"

அவ்வாறு அந்த ஓநாய் மீண்டும் ஒரு முறை பைக்குள் ஒன்றதும் அந்த விவசாயி பையை இருக முடனார். "நீங்கள் மிகவும் அப்பாவி. நீங்கள் மிருகங்களிடம் இவ்வாறு பரிவு கோட்டக் கூடாது. ஆனால் அவற்றின் இயற்கையான தீயகுணத்தை ஒரு போதும் மாறுமா என்ன?"என விவசாயி கூறினார். பின்னர், அவர் தன் மண்வெட்டயால் அந்த ஓநாயை வெட்டிக்கொன்றார். அதன் பிறகே மாஸ்டர் உண்மை நிலையை புரிந்து கொண்டார்.

இக்கட்டுக்கதை சீனர்களுக்கு மிகவும் தெரிந்தது. மாஸ்டர் தொங்குவா போன்ற படித்த மனிதர்கள் விரிவாக எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் என்பதையும் ஓநாய் ஒரு நன்றி கெட்ட மாருகம் என்ற கருத்தையும் இது கூறுகிறது.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040