• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கட்டுக்கதைகள்]

மருத்துவர் பியன் ச்சு

பியன் ச்சு சீனாவின் புகழ்பெற்ற பண்டைய மருத்துவர்களில் ஒருவர். அவர், ஒரு முறை இன்றைய கிழக்குச் சீனாவாக உள்ள ச்சி மாகாணத்திற்கு ஒரு பயண மருத்துவராகச் சென்றார். ஒரு நாள் அரசனிடம் சென்ற அவர், அரசனின் முகத்தின் நிறத்தையும் சக்தியையும் பார்த்து எச்சரித்தார். "அரசே, உங்களுக்கு ஒரு தோல் வியாதியுள்ளது. குணப்படுத்தாவிடால், இது மிகவும் மோசமாகும்". அந்த அரசன் கூறினான்"நான் நோயாளி அல்ல. எல்லா வைத்தியர்களும் ஆரோக்கியமான மனிதனை, நோயாளியாக காட்டி தமது குணப்படுத்தும் திறமையை வெளிப்படுத்துவதில் விருப்பமுடையவர்கள்"என்று கூறி மருத்துவரை விரட்டி விட்டான்.

பத்து நாட்கள் கழிந்தன. பியன் ச்சு மீண்டும் அரசனைப் பார்த்தார். அவர் கூறினார்"உங்கள் நோய் ஏற்கனவே இரத்தத்தில் கலந்து விட்டது. வைத்தியம் செய்யாவிபுன் இது மிகவும் கடுமையாக மாறும்". அந்த அரசன், நான் நோயாளி அல்ல என்று கூறி அவரை திரும்பி அனுப்பினான். மேலும் பத்து நாட்கள் கழிந்தன. அவர் மீண்டும் ஒரு முறைஅரசனைச் சந்தித்தார். அந்த நோய் உங்கள் வயிற்றிற்குள்ளும் குடலுமக்குள்ளும் புகுந்து விட்டது. மருத்துவம் பார்க்காவிடின் இது மிகவும் கடுமையாக மாறும். அந்த அரசன் அப்பொழுதம் தனக்கு நோயில்லை என்று கூறினார்.

சில நாட்கள் கடந்தன, மீண்டும் அவர் அரசனைச் சந்தித்தார். அக்கணத்தில் அவ்வைத்தியர் ஒரு வாக்கதையேலும் பேசாமல் நடந்து சென்று விட்டார். இது விசித்திரமாக இருக்கிறதே என உணர்ந்த அரசன் ஏன் என்று கேட்டு வர சிலரை அனுப்பினான். பியன் ச்சு கூறினார், "நோய் தோல் அளவில் நின்றால், மருந்து கலந்த வெற்றி ஓத்தடம் கொடுத்து குணப்படுத்தக்கூடியதாக இருக்கும், நோய் இரத்தத்தில் புகுந்தால் இருக்கும். நோய் வயிற்றுக்குள்ளும் குடலுக்குள்ளும் புகுத்து விட்டால் மருந்து பொருட்களைக் கொதிக்க வைத்து கஷாயமாகக் கொடுத்துக் குணப்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், அரசனின் நோய் ஏற்கனவே அவரின் எலும்பு மஜ்ஜைக்குள் புகுத்து விட்டது. அதைக் குணப்பருத்த வழியில்லை".

சில நாட்களுக்குப் பின்பு, பியன் ச்சு எதிர்பார்த்தது போல், அரசன் நோயில் வீழ்ந்தான். அவன் பியன் ச்சுக்கு ஆள் அனுப்பினான். ஆனால் அந்த வைத்தியர் அந்தமாகாணத்தை விட்டு ஏற்கனவே சென்று விட்டார். இந்தக் கதை சுட்டுவது என்னென்றால் ஒருவர் தம் சிறு குறைகளை அலட்சியம் செய்யாது கவனமெடுத்து விரைவாகச் சரிசெய்ய வேண்டும். ஏனெனில் இவற்றைவிட்டு விடுவோமானால், சிறிய தவறுகள் முடிவில் கைமீறிப் போய் விடும்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040