• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கட்டுக்கதைகள்]

லேளஷான் வந்த தாவோ குரு

பு சொங் லிங் எழுதிய சீனாவின் விநோதக்கதைகள் என்ற புகழ்பெற்ற பழக்கால சிறுகதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இவற்றில் சில முதல் ச்ங் வமிச காலத்தில் அதாவது 17,18ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை ஆகும்.

இந்தக் கதையானது, வாங் ச்சி என அழைக்கப்பட்ட ஒரு இளம மாணவனின் கதையை சொல்லுகின்றது. இவர் தாவோ மதத்தில் ஓர் ஆரவமுள்ள இருந்தான். லேளஷான் மலையில் இருந்த அழியாப்புகழ்பெற்ற ஒருவர் தாவோ மந்திரவித்தைகளில் தேர்ந்தவர் எனக் கேள்விப்பட்டு, வாங்ச்சி தனது குடம்பத்தை நீங்கி அங்கு சென்றான். அவன் துறவிகள் மடத்தில் தாவோ குருவை சந்தித்தான். குருவாக இருக்கும் படி, கேட்டான். வாங் எல்லா கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள முடியாத படி செல்லமாக வளர்ந்தவர் என்ற குரு நம்பினார். ஆனால், வாங் தன்னால் முடியும் என வற்புறுத்திக் கூறினார். எனவே அவன் அந்த மடத்தில் தொடர்ந்து தங்கியிருந்தான்.

விடியற்காலையில் குரு வாங்சிடம் ஒரு கோடரியை கொடுத்து ஏனைய சீடர்களுடன் காட்டில் விறகு வெட்ட செல்லும் படி அனுப்பினார். வாங் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டான். விறகு வெட்டி ஒரு மாதங்களுக்கு பின்னர், வாங்கின் கைகளும் கால் பாதங்கலும் காய்த்துப் போயின. துன்பத்தைத் தாங்க முடியாமல், கஷ்டப்பட்டான். அவனுக்கு வீட்டுக்கு திரும்பும் சிந்தனை உருவானது.

ஒரு நாள் பின்னேரம் அவன் வேலையில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது, இரண்டு விருந்தாளிகள் அவனுடைய குருவுடன் சேர்ந்து திராட்சை மது அருந்திக் கொண்டிருப்பதனைக் கண்டான். ஏற்கனவே, ிருட்டி விட்டு. எனவே குரு ஒரு வெள்ளைக் காகிரத்தை எடுத்து ஒரு வட்ட கண்ணாடி வடிவில் அதனை வெட்டி சுவர் மீது, ஒட்டினார். அது, அறைக்கு பிரகாசத்தைக் கொடுக்கின்ற ஒரு முழு நிலவாக மாறியது.

சீடர்கள் அவர்களுடைய குருவுக்காகவும் விருந்தாளிகளுக்காகவும் ஏவல் செய்தனர். குரு ஒரு குவறை திராட்சை மதுவை எடுத்து அதனை சீடர்கள் குடிப்பதற்குக் கொடுத்தார். பல சுற்றுக்களின் பின்னரும் போத்தலில் உள்ள திராட்சை மது குறையாமல் இருப்பதைப் பார்த்து சீடர்கள் ஆச்சரியப்பட்டனர்.

நாம் மது மட்டுமே குடிப்பது எச்சரிக்கை இருக்கிறது. எங்களுக்காக யாராவது நடனமாடினார். இந்த மாலைப் பொழுது சிறப்பாக இருக்கும் என ஒரு விருந்தாளி கூறினான். குரு சிறித்துக்கொண்டே உணவு உண்ணும் குச்சிகளை சுவரில் இருந்த சந்திரனை நோக்கி எறிய ஒரு அடி உயரத்தை விட சிறிய ஒரு அழகான இளம் பெண் தோன்றினாள். அவள் சுவரிலிருந்து கீழிறங்கி உடனே மனித அளவிற்கு வளர்ந்தாள். அழகாக ஆடினாள்.

அவள் ஆடல் பாடலை முடித்ததும் மேசை மீது பாய்ந்தேறி பழையபடி உணவுண்ணும் குச்சியாக மாறினாள். அந்த மூன்று மனிதர்களும் வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தனர். நேரமாகி விட்டது. நான் இப்போது வீட்டிற்குப் போக வேண்டும் என விருந்தினர்களில் ஒருவர் கூறினார். அடுத்து ம்மூன்று மனிதர்களும் தங்கல் மேசையை சந்திரனை நோக்கி நகர்த்தினார்கள். அதன்பின் அந்தச் சந்திரன் ஒளி மங்கி, மெழுகுவர்த்திகள் எரிந்தன. குரு மேசையில் அமர்ந்திருப்பதையும் இரண்டு விருந்தாளிகள் போய்க் கொண்டிருப்பதையும் மட்டும் அந்தச் சீடர்கள் பார்த்தனர். தற்போது எஞ்சிய உணவுகள் மேசையில் கிடந்தன.

மற்றொரு மாத கடந்தது. வாங் கடின வேலைகளைச் செய்ய முடியாமல் திண்டாடினான். ஆனால், குரு இதுவரை அவனுக்கு எந்த வித்தைகளையும் கற்பிக்க வில்லை.

வாங் குருவிடம் கூறினான். நான் ஏற்கனவே இங்கு அனேக மாதங்கள் இருந்து விட்டேன். எப்பொழுதும் அதிகாலையில் எழுந்து விறகுகளை வெட்டி சூரியன் மறையும் போதே திரும்புகிறேன். நான் வீட்டிலிருந்த போது ஒரு போதும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. நான் ஏற்கனவே உனக்கு கூறினேன் உண்ணால் தாக்குப் பிடக்க முடியாதென்று கூறிய குரு சிரித்த படி நாளை காலை நீ வீட்டிற்குப் போகலாம் என்றார்.

வாங் குருவிடம் தனக்கு சில வித்தைகளையாவது கற்பிக்கும் படி வேண்டுக்கொண்டான். "நீ என்ன கற்க விரும்புகிறாய்?"குரு கேட்டார். குரு அடிக்கடி இலகுவாகச் செய்யும் சுவருக்கூடாக நடப்பதைக் கற்பித்தால் போதுமானது என வாங் கூறினான். குரு உடன்பட்டார். அவர் வாங்கிற்கு ஒரு மந்திரத்தைக் கூறி அதை திருப்பி அவன் அப்படியே ுச்சரித்தால் அவன் சுவருக்கு ஊடாக நடக்கலாம் என்றார். முதல் முறை வாங் துணிந்து செய்யவில்லை. குரு அவனை முயற்சி செய்யும் படி உற்சாகப்படுத்தினார். வாங் தடங்களில்லாமல் சுவருக்கூடாக கடந்தான். குரு அவனை ஊக்கமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் படியும் மந்திரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாமெனவும் அவ்வாறல்லாவிடின் அது வேலை ஓய்யாது எனவும் எச்சரித்தார். வாங் வாக்குறுதியளித்து மலையின் அடிவாரம் நோக்கி ஒன்றான்.

அவன் வீட்டை அடைந்து தான் ஒரு தேவதையை சந்தித்ததாகவும் சுவருக்கூடாக நடக்கும் கலையை கற்றுக்கொண்டதாகவும் பெருமையுடன் மனைவியிடம் கூறினான். மனைவியை நம்பச் செய்யும் பொருட்டு வாங் மந்திரத்தை மீண்டும் கூறி தவறக்கூடாகப் போனான்.

தடால் என்னும் உரத்த சத்தத்துடன் வாங் தரையில் விழுந்தான். ஒரு நெற்றியில் பெரிய வீக்கம் ஏற்பட்டது. அவன் மனைவி அவனைப் பார்த்துச் சிரித்தாள். அப்படியே ஒரு வித்தை இருந்தாலும் இரண்டு மூன்று மாதங்களில் அதை நீ கற்றுக்கொள்ளலாம் என நம்பிய நீ ஒரு முட்டாள் தான். அவமானமும் ஆத்திரமும் ஆழ்ந்துகொள்ள வாங் குருவை சபித்தபடியே மீண்டும் ஒரு சோம்பேறி மனிதனானாம்.

1 2 3 4 5 6 7 8 9
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040