• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வரலாற்றில் குறிப்புகள்]

பட்டுப் பாதை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

பட்டுப் பாதை என்பது சீனாவின் பண்டைகால நாகரிகம் பற்றி மேலை நாடுகளுக்கு பிரச்சாரம் செய்யும் ஒரு முக்கிய வழி முறையாகும். கீழை மேலை பொருளாதார மற்றும் பண்பாட்டு தொடர்பை இணைக்கும் பாலமாக இது அழைக்கப்படுகின்றது. இங்கே மக்கள் அடிக்கடி குறிப்பிடும் பட்டுப் பாதை பொதுவாக மேற்குஹான் ஆட்சிகாலத்தில் தூதர் சான்சியென் அப்போதைய தலைநகர் சான் ஆனிலிருந்து கிள்ம்பி ரோம் சென்றடைந்த பாதையாக குறிப்பிடப்படுகின்றது. இந்த பாதைக்கு இரண்டு கிளைப் பாதைகள் உண்டு. தெற்கில் துங்குவானிலிருந்து குங் ரன் மலைத் தொடர் வழியாக தற்போதைய சிங்கியாங், ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதி ஈரான் மற்றும் அரபு நாடுகள் வழியாக ரோம்ானிய பேரரசை சென்றடையலாம். இன்னொரு பாதை துங்குவாங்னின் யூ மன் கமவாயின் தெற்கு தியென்சான் மலைத் தொடரைத் தாண்டி முன்னாள் சோவிய்த் யூனியனின் மத்திய ஆசிய பகுதிக்கு ஊடாக தென் மேற்காகச் சென்று தென் வழியுடன் இணைந்து செல்ல வேண்டும். இந்த 2 பாதைகளும் பொதுவாக தரை வழியான பட்டுப் பாதையாக அழைக்கப்படுகின்றன.

தவிரவும் வேறு 2 பட்டுப் பாதைகளும் பலரும் அறியாத பாதைகளாகும். ஒன்று "தென் மேற்கு பட்டுப் பாதை".அது சீனாவின் ஸ்ச்சுவான் மாநிலத்திலிருந்து கிளம்பி யூன் நான் மாநிலம் வழியாக ஈரோவாடி ஆற்றைத் தாண்டி மியன்மரின் வட பகுதியிலுள்ள மன்குங் முதலிய இடங்களுக்கு ஊடாக கடந்து இந்தியாவின் வட கிழக்கிலுள்ள மணிுப்பூர் வழியாக சென்று கடைசியில் ஈரான் பீடபூமி சென்றடையும். இந்த பட்டுப்பாதையின் வரலாறு தரை பட்டுப் பாதையின் வரலாற்றை விட பழமையானது. 1986ம் ஆண்டில் தொல் பொருள் ஆய்வாளர்கள் ஸ்ச்சுவான் மாநிலத்தின் குவான்ஹென் நகரில் அற்புதமான சான்சிங்தெய் சிதிலத்தைக் கண்டிபிடித்துள்ளனர். இது 3000 ஆண்டுகால வரலாறுடையது. மேற்கு ஆசிய மற்றும் கிரேக்க பண்பாட்டுடன் தொடர்புடைய தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தொல் பொருட்கள் கீழை மேலை பண்பாட்டு பரிமாற்ற காலத்தில் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த கருத்து உறுதிப்படுத்தப்பட்டால் இந்த பட்டுப் பாதை 3000 ஆண்டுகளுக்கு முன் உருவாயிற்று என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னொரு பட்டுப் பாதை சீனாவின் குவாங்சோ விலிருந்து கப்பல் மூலம் மவார்ரா நீரிணை.ைக் தாண்டி, இலங்கை, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் பாதையாகும். இந்த பாதை கடல் பட்டுப் பாதை என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலி முதலிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்கள் இந்த கடல் பட்டுப் பாதை சீனாவின் சொன் வம்சகாலத்தில் உருவாகியதை காட்டுகின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040