சீனர்கள் ஏன் டிராகன் தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர்.
இந்த பெயர் பண்டைகாலத்தின் குலமரபுசின்ன புராண கதைகளிலிருந்தும் வந்துள்ளது. குவாந்தி மத்திய சீனாவை இணைப்பதற்கு முன்னர் "கரடி" என்னும் மங்கலச் சின்னத்தை கும்பிட்டனர். ச்யேன்யூ என்பவரை தோற்கடித்து மத்திய சீனாவை ஒருங்கிணைத்த பின் சரணடைந்த படைவீரர்களுக்கு ஆனுதல் தெரிவிக்கும் வகையில் குவாந்தி முந்தைய "கரடி" என்னும் குலமரபுச் சின்னத்தை கைவிட்டு புதிய குலமரபுச் சின்னத்தைப் பயன்படுத்தினார். இந்த புதிய குலமரபுச் சின்னமான"டிராகன்" முந்தைய "கரடியின்"தலையையும் "பாம்பின்"உடம்பையும் இணைந்துள்ளது. இந்த அற்புடமான உருவாக்கம் சீன தேசத்தின் வளர்ச்சி வரலாற்றையும் பல்வேறு இனங்களை ஒருங்கிணைக்கும் வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்றது.
பிறகு, சீன தேசத்தின் சின்னமான"டிராகன்" போகப் போக எழுத்தாகிவிட்டது. யின்சான் வம்சகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறியுரை எலும்பு எழுத்துக்களில் "டிராகன்"எழுத்துக்களைக் காணலாம். பண்டைய மட்பாண்ட பொருட்களின் புதைபடிவங்களில் "டிராகன்"வடிவமும் கண்டுபிடிக்கப்பட்டது. தொல் பொருள் ஆய்வாளர்கள் சீனாவின் லியோநின் மாநிலத்தின் பூஃசின்ச்சாஹைய் சிதிலத்தில் கண்டுபிடித்த தொல் பொருட்களில் டிராகன் வடிவம் தீட்டப்பட்ட இரண்டு மட்பாண்ட புதைபடிவுகள் கண்டெடுக்கப்பட்டன.
"டிராகன்"சீனத் தேசத்தின் முன்னோடி குலமரபுச் சின்னம். சீனத் தேசம் டிராகனுடன் இணைந்து வாழ்ந்துள்ளது. ஆகவே "டிராகத்துடன்"இணைந்து வான் மனிதரை உருவாக்குவதென்ற கதை உருவாயிற்று. பண்டைகாலத்தில் தங் என்னும் பெண்மனியால் ஆகாயத்தில் வாழ்ந்த டிராகனுடன் உறவுகொண்டு பெற்ற மகன்தான் யென் மன்னர் ஆகவே சீன தேசத்தின் முதாதையரை டிராகனின் தலைமுறையினர் என்று கதைகளில் கூறப்படுகின்றது.
1 2 3 4 5 6 7 8 9 10