• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வரலாற்றில் குறிப்புகள்]

சீனாவின் பட்டுப் பூச்சி வளர்ப்பு நுட்பம் எப்படி மேலை நாடுகளுக்கு பரவியது?

சீனாவின் பண்டைகாலத்தில் 5000 ஆண்டுகளுக்கு முந்திய குவான்தியின் ராணி லோச்சு மக்களுக்கு பட்டு பூச்சி வளர்ப்பு நுட்பத்தை கற்பித்தார். சீனாவின் குறியுரை எலும்பு எழுத்துக்களில் பட்டுப் பூச்சி முசுக்கொட்டை மரம், பட்டு, பட்டுத் துணி போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சீனாவின் முதலாவது கவிதொகுதியில் முசுக்கட்டை மரத்தை நட்டு பட்டுப் பூச்சி வளர்ப்பு பற்றிய கவிதை எழுதப்பட்டது. வசந்த காலத்தில் இளம் பெண் ஒருத்தி கூடையை எடுத்துக் கொண்டு சிறிய பாதையில் சென்று மிக சிறிய மிக மெல்லிய முசுக்கட்டை மரத்தின் இலையை பறிப்பது பற்றி கவிதை வர்ணிக்கின்றது. ஆகவே பண்டைகாலம் தொட்டு சீன மக்கள் முசுக்கட்டை மரம் நட்டு, பட்டுப் பூச்சி வளர்த்து பட்டு துணி நெசவுபடுத்தும் தொழில் நுட்பத்தை கிரக்கித்துக் கொண்டனர் என்பது இந்த கவிதை மூலம் அறியப்பட்டுள்ளது.

மேற்கு வம்ச காலத்தின் தூதர் சான்ச்சியென் சிங்சியாங் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்த பின் சீனப் பட்டு பொருட்கள் ஐரோபாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஐரோப்பியர்கள் இந்த மெல்லிய பளபளப்பாக ஒளிகின்ற துணிகளை கண்டு அவற்றை மதிப்புக்குரிய பொருளாக கருதி ஒருவரின் ஒருவராக வாங்கினர். ரோமானியப் பேரரசர் ஹைசா சீனப் பட்டு துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்து இசை நாடகத்தைப் பார்த்த போது அரங்கில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது. கொலம்பஸ் கடலில் பயணம் செய்த போது மாலுமிகளுக்கு ஒரு கட்டளையிட்டார். பெருநிலத்தை யார் கண்டறிகிறார்களோ அவர்களுக்கு பட்டுத் துணிச் சட்டை பரிசாக வழங்குவதாக அவர் வாக்குறுதியளித்தார். அப்போது பட்டுத் துணியின் விலை தங்கத்தின் மதிப்பு போல் உயர்வாக இருந்தது என்பதை அவரின் செயல் காட்டியது. அப்போதைய ரோமானிய பேரரசு மிக அதிகமான பணத்தை இறக்குமதிக்குச் செலவழித்ததால் அதன் நிதிநிலையில் பற்றாக்குறை காணப்பட்டது. அதற்காக முதியோர் மன்றத்தின் உறுப்பினர்கள் சீனப் பட்டுத் துணி விற்பனையைத் தடைசெய்யும் கட்டளையை அங்கீகரித்தனர். ஆனால் சீனப் பட்டுத் துணி விரும்பிய மேல் குடி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் ரோமானிய பேரரசு இந்த தடையை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கி.பி.6ம் நூற்றாண்டில் ரோமானிய மன்னர் சியாஸ்தினியன் சீனாவிலிருந்து நாடு திரும்பிய பாதிரியார் ஒருவரை வரவழைத்தார். சீனாவுக்கு மீண்டும் சென்று பட்டுப் பூச்சி வளர்ப்பு நுட்பத்தை ரகசியமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார். முசுக்கட்டை மரம் நடுவது, வசந்த காலத்தில் கூட்டுப் புழுவாக இருந்து ஒரு வாரம் கழிந்த பின் அது பூச்சியாக மாறும் நுட்பத்தை அறிய இந்த பாதிரியார் சீனாவின் யூன்நான் மாநிலம் சென்றார். பின் முசுக்கட்டை மர இலையைக் கொண்டு பூச்சியை வளர்த்து கடைசியில் பூச்சியிலிருந்து பட்டு நூல் எடுக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டு ஒரு கைப்பிடி முசுக்கொட்டைகலையும் அந்த மரத்தின் விதைகளையும் எடுத்துக் கொண்டு நாட்டுக்கு திரும்பினார். ஆனால் அவர் தவறாக கருதி பட்டுப் பூச்சிகளின் கூட்டுப் புழுக்களை விளை நிலத்தில் விதைத்தார். முசுக்கட்டை மரத்தின் விதைகளை அரவணைப்பில் வைத்தார். சரியாக விளைய வில்லை. பிறகு சியாஸிநியன் மீண்டும் இரண்டு பாத்திரிகளை சீனாவுக்கு அனுப்பினர். அவர்கள் முந்தைய பாத்திரியாரின் அனுபவத்தில் இருந்து படிப்பினையை ஏற்றுக் கொண்டு மரம் நடுதல், பூச்சி வளர்ப்பு வழிமுறைகளை நன்றாக கற்றுக் கொண்டு பட்டுப் பூச்சி விதைகளையும் முசுக்கட்டை மர விதைகளையும் உள்ளீடு அற்ற குச்சியில் வைத்து தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். இவ்வாறு சீனாவின் பட்டுப் பூச்சி வளர்ப்பு தொழில் நுட்பம் மேலை நாடுகளுக்கு பரவியது.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040