• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வரலாற்றில் குறிப்புகள்]

சீன மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்

சீன மொழி உலகின் பயன்பாட்டுத் துறையில் மிக நீண்டகாலம் உடையது. அதன் விபரங்கள் செழுமையானது. எண்ணிக்கையும் மிக அதிகமானது. அதன் உருவாக்கமும் பயன்பாடும் சீனத் தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சியை வளர்ந்துள்ள மட்டுமல்ல. உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஆழந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பைன்போ சிதிலம் உள்ளிட்ட இடங்களில் சீன மொழி எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வகைகள் அப்போதுதான் 50க்கும் மேலாக அடைந்தன. எழுத்துக்கள் வரிசையில் ஆனவை. அத்துடன் குறிப்பிட்ட முறையில் ஒழுங்கானவை. எளிதான எழுத்தின் தனிச்சிறப்பியல்பும் அதற்கு உண்டாகியுள்ளது. இவை சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையாகும் என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பைன்போ சிதிலம் உள்ளிட்ட இடங்களில் சீன மொழி எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வகைகள் அப்போதுதான் 50க்கும் மேலாக அடைந்தன. எழுத்துக்கள் வரிசையில் ஆனவை. அத்துடன் குறிப்பிட்ட முறையில் ஒழுங்கானவை. எளிதான எழுத்தின் தனிச்சிறப்பியல்பும் அதற்கு உண்டாகியுள்ளது. இவை சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையாகும் என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீன மொழி எழுத்துக்கள் கி.மு.16ம் நூற்றாண்டின் சான் வம்சகாலத்தில் தொகுதியான எழுத்துக்களாக உருவாகின. சான் வம்சகாலத்தின் துவக்கத்தில் சீனாவின் நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் வளர்ந்தது. குருத்து மொழி தோன்றுவது அதன் தனிச்சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இந்த எழுத்துக்கள் ஆமை ஓட்டிலும் விலங்குகளின் எலும்பிலும் செதுக்கப்பட்ட பழைய எழுத்துக்களாகும். சான் வம்சகாலத்தில் மன்னர்கள் எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன் ஆரூடம் கணித்தனர். அதற்காக விலங்கு எலும்பு அதற்காக பயன்படுத்தப்பட்டது

விலங்கு எலும்பை பயன்படுத்துவதற்கு முன் பதனீடு செய்ய வேண்டும். முதலில் அதில் உள்ள ரத்தமும் இறைச்சியும் நீக்கப்பட வேண்டும். சமப்படுத்தப்பட வேண்டும். கணியன்களின் பெயர் அதில் செதுக்கப்பட வேண்டும்.

தற்போது தொல் பொருள் ஆய்வாளர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் எலும்பு துண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். சில முழுமையானவை. சிலவற்றில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை உடைந்தவை. புள்ளிவிபரங்களின் படி விலங்கு எலும்பில் செதுக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை நான்காயிரமாகும். அவற்றில் 3000 எழுத்துக்களை அறிஞர்கள் ஆராய்ந்தனர். ஆயிரம் எழுத்துக்களின் அர்த்தத்தை அறிஞர்கள் விளற்கிக் கொண்டு படிக்க முடியும். மிச்சத்தின் அர்த்தம் பற்றி கடுமையான கருத்து வேற்றுமைகள் உள்ளன. இருந்தாலும் விளக்கப்படக் கூடிய ஆயிரத்துக்கும் அதிகமான எழுத்துக்களை படிப்பதன் மூலம் அப்போதைய சான் வம்ச காலத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய நிலைமைகளை பொதுவாக அறிந்து கொள்ளலாம்.

சீன மொழி எழுத்துக்கள் சித்திரங்களைப் போன்றவை. ஒலிப்பையும் வடிவத்தையும் மையமாகக் கொண்ட எழுத்து அமைப்பு முறையுடன் மொத்தம் பத்தாயிரம் எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இவற்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் மூவாயிரமாகும். இந்த மூவாயிரம் எழுத்துக்களால் எல்லையற்ற சொற்களை உருவாக்கலாம். பல்வகை வசனங்களை உருவாக்க முடியும்.

சீன மொழி எழுத்துக்கள் உருவான பின் அண்டை நாடுகளில் அவை ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்தின. ஜப்பான், வியட்நாம், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் எழுத்துக்கள் சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையில் உருவானவை.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040