• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வரலாற்றில் குறிப்புகள்]

சான்தின் தூன் ரன் எனும் மனிதர்கள் பயன்படுத்திய எலும்பு ஊசியும் நகைகளும்

சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற் கருவிகள் கால கட்டத்தில் மனிதர்கள் ஊசியை தயாரித்து பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டனர். இந்த ஊசி மெல்லிய எலும்பினால் தயாரிக்கப்பட்டது. தொல் பொருள் ஆய்வாளர்கள் ஐரோப்பாவிலுள்ள ஓரெனா பண்பாட்டு சிதிலத்தில் இத்தகைய எலும்பு ஊசியை கண்டிபிடித்துள்ளனர். ஆனால் அதன் தயாரிப்பு நுட்பம் மிகவும் எளிதானது. ஆனால் சீனாவின் சான்தின் துங்ரன் எனும் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு ஊசியின் தயாரிப்புத் தரம் மக்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று சொல்லலாம்.

இந்த எலும்பு ஊசி 82 மிலி மீட்டர் நீளம். அதன் விட்டம் 3 மிலி மீட்டர். தீ குச்சியை விட சிறிது தடியானது. அதன் உடம்பு வளைந்து காணப்படுகின்றது. தோற்றம் சரிவாக உள்ளது. ஊசியின் முனை கூர்மையானது. துளை தெளிவானது. கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கும் போது ஊசியின் துளை சேதமடைந்தது வருத்தம் தருகின்றது.

ஊசி இருந்தால் நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் நூல் கண்டுபிடிக்கப்பட வில்லை. சான்தின் தூன் ரன் எனும் மனிதர்கள் பயன்படுத்திய நூல் செடி ஒன்றின் நாராக இருக்காது. மானின் நரம்பாகவும் இருந்திருக்கலாம்.

ஊசியும் நூலும் பெற்றுக் கொண்ட பின் ஆடை தைக்கக் கூடும். இதன் அடிப்படையில் யூகித்தால் சான்தின் தூன் ரன் எனும் மனிதர்கள் ஆடை அணியும் இனமாகும்.

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சான்தின் தூன் ரன் என்னும் மனிதர்கள் நகைகளை தயாரித்து அணிய தெரிந்திருந்தனர். அவர்கள் தயாரித்த நகைகளை தொல் பொருள் ஆய்வாளர்கள் சிதிலத்திலிருந்து கண்டு எடுத்துள்ளனர். இந்த நகைகள் பல்வகை வண்ணக் கற்கள் காட்டு விலங்குங்களின் பல், மீனின் எலும்பு, சோழிகள் ஆகியவற்றால் கொண்டு அவற்றில் துளை போட்டு பின் கயிறால் கோர்க்கப்பட்ட நகைகளாகும். கயிறுகள் சிவப்பு நிறத்தில் சாயந்தோயப்பட்டவை. சிவப்புக் கற்களின் பொடியால் சிவப்பு நிறம் உருவாக்கப்பட்டது. இந்த சிவப்பு கல் சிவப்பு தாது மாவாக கற்கருவிகளால் உடைக்கப்பட்டது.


1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040