• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[அதிசயங்கள் பற்றிய கதை]

மேற்கு ஏரியின் கதைகள்

கிழக்கு சீனாவில் ஹங்சோவில் புகழ்பெற்ற காட்சித்தலம் மேற்கு ஏரியாகும். 14ஆம் நூற்றாண்டில் இத்தாலிய பயணி மார்க்கோ போலோ ஒரு முறை "மேற்கு ஏரியில் நீங்கள் இருக்கும் போது இது சொர்க்கத்தில் இருப்பது போன்று இருக்கும்" என்று கூறினார்.

மூன்று புறங்களிலும் மலைச்சிகரங்கள் சூழ்ந்திருக்க, அற்புதமான இந்த நீர்நிலை பல நூற்றாண்டுகளாகக் கவர்ந்திழுக்கிறது. ஏரியும் அதன் சுற்றுச்சூழலும் ஒரு பாரம்பரிய சீனத் தோட்டத்தின் பண்புகளை பிரமாண்டமான அளவில் கொண்டுள்ளன. இயற்கையாக விநோதமான வடிவமைப்புடைய சிகரங்கள், அமைதியான காடுகள் மற்றும் நீரூற்றுக்கள், அடர்ந்த தாவரங்கள் மற்றும் வசந்த காலத்தில் பூக்கும் எண்ணற்ற மலர் வகைகள் இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சிற்பப் பொக்கிஷங்களும் கட்டிடக் கலையின் அம்சங்களும் மேன்மையூட்டுகின்றன. ஆண்டின் எந்தப் பருவத்திலும் கண்களுக்கு விருந்தாகும் காட்சிகள் மாறும் பரவங்களுடன் இயற்கை ஒளி நுட்பமாகக் கலந்து, "போதையூட்டும்" ஒரு மாறும் தோற்றத்தைத் தருகின்றது.

புகழ் பெற்ற சொங் வமிசக் கவிஞனான சூ தொங் போ, பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவர் ஒரு முறை மேற்கு ஏரியை புராதன சீனாவில் சிறந்த அழகியாக திகழ்ந்த (XI SHI)சீ சுயுடன் ஒப்பிட்டார்.

"அமைதியான நீர் ஒரு வெயில் நேரத்தில் பிகாசித்துக் கொண்டிருக்கின்றது. மூடுபனியால் மூடப்பட்ட மலைகள் மழையை போர்த்திருந்தன. சீ சுவின் வெளிப்படையான கம்பீரமான புறத்தோற்றத்தை போன்று மேற்கு ஏரியானது எப்போதும் மயக்கிக் கொண்டு இருக்கின்றது."

பல குறிப்பிடத்தக்க பண்புகள் முக்கியமாக சுட்டிக்காட்டலாம். வெளி ஏரியின் மத்தியின் தெற்கில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தீவு உள்ளது. இது ஒரு சிறிய கடல் தீவு என அறியப்படுகின்றது. அது நான்கு சிறிய ஏரிகளால் சூழப்பட்டிருக்கின்றது.

மூன்று குளங்களும் நிலாவைப் பிரதிபலிப்பதை இங்கிருந்து பார்க்கலாம். இரவில், நீருக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும் கல்விளக்குகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படும் போது, மூன்று நிலாக்களின் பிரதிபலிப்பு தோன்றுகிறது. இலையுதிர்கால நிலாப் பண்டிகையின் போது, இந்தக் காட்சி உண்மையிலேயே ஒரு மாயாஜாலமாகத் தெரியும். வெளி ஏரிக்கும், வடக்கு உள் ஏரிக்கும் நடுவில் உள்ள தனிமை மலைத்தீவு அருமையான இயற்கைக் காட்சித் தலமாகும். அருகிலுள்ள விண்ணை மூட்டும் இரண்டு சிகரங்களும் மற்றொரு மயக்கும் காட்சியாகும். குறிப்பாக, படகில் ஏரியைக் கடக்கும் போது இந்த பரவசமூட்டுகிறது.

மேற்கு ஏரி பற்றி பல அழகான கதைகள் உள்ளன. வெள்ளைப் பெண் பாம்பு கதை என்பது இவற்றில் மிகவும் பரபலமானது.

ஒரு முறை இரண்டு பாம்புகள் இருந்தன. அந்த வெள்ளைப் பாம்பும் கறுப்புப் பாம்பும் அழகான இளம் பெண்களாக மாறின. வெள்ளைப் பாம்பு பை சு சென் "BAI SU ZHEN"எனவும் கறுத்த பாம்பு சியோ ச்சிங் எனவும் அழைக்கப்பட்டன. ஒரு நாள் அவர்கள் மேற்கு ஏரிக்கு பயணித்த போது, சு சியன் எனும் இளைஞனை பிரபலியமான துவான் சியோ பாலத்தில் சந்தித்தன. பையும் சு சியனும் உடனடியாக காதலில் வீழ்ந்தன. சியோ ச்சிங் ஒரு மந்திரம் போட்டு மழை பெய்யச் செய்தார். சு சியன் அந்த பெண்களுக்கு தன்னுடைய குடைகளைக் கொடுத்தான். இந்த குடை உதவியின் பின்னர் பையும் சு சியானும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஒரு மருந்துக் கடையை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர்.

ஜின் ஷான் என்ற ஒரு தொலைதூர பௌத்த ஆலயத்தின் துறவியான ஃபா ஹை என்பவர் பை ஒரு பாம்பாக இருந்ததை கண்டுபிடித்தார். அவர் சு சியானை பை ஐ விட்டு செல்லும் படி வற்புறுத்தினார். அவன் மறுத்த போது பைக்கு குடிப்பதற்கு விழா திராட்சை மதுவை அவனுக்கு கொடுத்தார்.

பை திராட்சை மதுவைக் குடித்த போது, அவள் முன்பிருந்த உண்மையான நிலைக்கு திரும்பினாள். சு சியான் அவளைப் பார்த்து பயத்தால் இறந்தான். வெள்ளைப் பாம்பு தேவர்கள் உலகத்துக்கு சென்று பாதுகாக்கும் மாற்று மருந்தை தேடினாள். பல கஷ்டங்களின்மத்தியில் அவளுடைய உண்மையான அன்பினை கண்ட தேவலோக பெரியார் ஒரு உயிர்ப்பு மருந்தினைக் கொடுத்தார்.

சு சியான் மீண்டும் உயிர் மீண்டது. இருவரும் இப்பவும் மிக ஆழமாக காதல் கொண்டானர். ஆனால் சு சியன் ஜின் ஷான் ஆலயத்திற்குள் அடைக்கப்பட்டு பௌத்த துறவியாகும்படி வற்புறுத்தப்பட்டான். பையும் சியோ ச்சிங்கும் அவனை மீட்க சென்றனர். சு சியனை மீட்பதற்கான சண்டையின் போது ஆலயத்தை மூழ்கடிப்பதற்காக வெள்ளத்தை உருவாக்கினாள். பை முழுமாத கற்பினியாக இருந்தபடியால் அவளால் சண்டையிட முடியவில்லை. முதன் முதலில் சு சியானைச் சந்தித்த மேற்கு ஏரிக்கு ஓடினாள்.

அதே நேரத்தில் சு சியான் ஓர் இளம் பௌதேத துறவியினால் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் சந்தித்த அதே இடத்திற்கு வந்தான் பாஹை அவர்களை பிடித்த போது பை ஒரு குழந்தையை பெற்று எடுத்தாள். அவர் பையை லேபோங் கோபுரத்தின் கீழ் சிறையிட்டார். மேற்கு ஏரியின் நீர் வற்றினால் அன்றி அல்லது கோபுரம் உடைத்தால் அன்றி அவள் மேறு ஏரியில் இருந்து ஒரு போதும் வராதவாறு சாபமிட்டார்.

சில வருடங்களுக்கு பின்னர் சியோ ச்சிங் மேற்கு கரைக்கு திரம்பி வந்தார். அவள் மேலும் ஏரியின் நீரை வற்றச் செய்தாள். வெள்ளை பாம்பு பெண்ணை மீட்டார்.

அவர்களின் காதல் கட்டுக்கதை மேற்கு ஏரிக்கு சிறப்பை தருகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040