• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[அதிசயங்கள் பற்றிய கதை]

தொங்கும் ஆலயம்

தொங்கும் ஆலயம் சீன மொழியில் சுயான் கொங் சு எனப்படுகிறது. இது வட சீனாவின் ஷான்சி மாநிலத்தின் தாதுங் நகரில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது. இதன் பாதித் தூரம் செங்குத்தான மலைப் பாறைகளுக்கு ஊடே 1400 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாகும். அன்றி, ஏனைய ஆலயங்களைப் போல இங்கு பொத்தவாதம், தாவோ வாதம், கொன்பியூசியஸ் வாதம் ஆசிய மூன்று மதங்களும் ஒன்றாக ஒரே மண்டபத்தில் வழப்படுகின்றன. இது இந்த மதங்களுக்கு உயர்ந்த ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றது. சுயான் கொங் என்ற பேயரே இதைக் காட்டுகின்றது. சீனத்தில், சுயான் என்பது தாவோ வாதத்தில் மந்திரதந்திரக் கல்வியாகும். சொங் என்றால், வெறுமைமையைக் குறிக்கும் எல்லாவற்றையும் நீக்கி மற்றற்று இருக்கின்ற வெறுமையே மதத்தின் முக்கிய தத்துவம்.

இந்த ஆலயம், ஹெங்ஷான் மலையின் அடிவாரத்தில் ஒரு ஆற்றோடையில் அமைந்துள்ளது. அந்தரத்தில் தொங்கும் இதன் பகோடா ஒரு அபூர்வமான கட்டிடக்கலையாகும். ஜின் லோங் கணவாயில் கடக்கின்ற செங்குத்தான பாறையின் மீது இது கட்டப்பட்டுள்ளது.

இரு ஒரு விந்தையான கட்டிடக்கலை சாதனையாகும். இந்த ஆலயம் நிலத்திலிருந்து 50 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் பள்ளத்தாக்கை அடிக்கடி பயமுறுத்துகின்ற பிரமாண்டமான பாறைப் பகுதி ஒன்று ஆலயத்தின் உச்சியின் மீது நீட்டிக்கொண்டிருக்கின்றது. சூரியனின் வெப்பத்திலிருந்தும் மழையிலிருந்தும் நிழலைக் கொடுத்த வண்ணம் பாதுகாக்கின்றது.

இந்த ஆலயம் ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரம் மட்டும் சூரிய வெளிச்ச்தைப் பெறுகின்றது. பல வருடங்களுக்கு பின்னரும் மரத்தால் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் பழுதடையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். விட்டங்கலும் தூண்களும் உள்ளூரில் கிடைக்கும் வயிரம் பாய்ந்த மர வகைகளினால் செய்யப்பட்டவை. இவைகள் கறையான மற்றும் மழையில் இருந்தும் பாதுகாப்பதற்கு எண்ணெயில் ஊறவைக்கப்பட்ட பின்னர் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மரத்திற்கு ஓர் பலத்தைக் கொடுக்கின்றது.

மண்டபங்களும் மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பாறைகளின் இயற்கையான வடிவம் நன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமான மண்டபங்கள் பெரியவை அல்ல. சிறியவையாக உள்ளன. ஆனால், பிரதான மண்டபமான சன்குவான் மண்டபம் மிகவும் விசாலமானது. இவை பாறைக்குள்ளே தோண்டப்பட்டு நிறுவப்ப்டுள்ளன. ஆலயத்துக்குள் பல படங்களும் செம்பு இரும்பு கற்களால் அமைக்கப்பட்ட 78 வண்ணச் சிற்பங்களும் உள்ளன.

பாறைமீது இது ஏன் கட்டப்பட்டது எனஅறு வியக்கலாம். ஆலதத்தின் கீழ் உள்ள பாதை ஒரு காலத்தில் முக்கியமான போக்குவரத்து வழியாக இருந்தது.

இந்த ஆலயத்தின் அபூர்வம் எல்லா வருடங்களிலும் ஆச்சிரியப்பட வைத்தது. பாறமீது நான்கு எழுத்து உருக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் பொருள் "கொங் சூ பான்" போன்ற உயர்ந்த கட்டிடக்கலை நிபுணரால் மட்டுமே இப்படிப்பட்ட உன்னதமான படைப்பை உருவாக்க முடியும் என்பதாகும். கொங் சூ பான் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கட்டிடக்கலை நிபுணர் ஆவார். இவர் சீனக் கட்டிடக் கலையின் தந்தை என கருதப்படுகின்றார். ஆனால் நிச்சயமாக இந்த ஆலயம் அவரால் கட்டப்படவில்லை.

இந்த ஆலயம் பல தடவை செப்பனிக்கப்பட்டுள்ள போதிலும், நவீனப் போக்குவரத்து வசதிகளினால் இந்தப் பள்ளத்தாக்கிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துவிட்டதால், இதுவரை இல்லாத ஒரு பெருஞ்சோதனை இந்த ஆலயத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது எனலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040