|
![]() |
மூன்று பள்ளத்தாக்குகளின் கதை
யாங்சி நதி சீனாவின் மிக நீளமான நதி என்பதுடன் உலகிலேயே நீளமான நகிகளிலும் ஒன்றாகும். யாங்சி நதியிலே மூன்று பள்ளத்தாக்குகள் உள்ளன. இவை இந்நதியில் பிரபலமான ியற்கை காட்சிகளுக்கும், உயிரோட்டமான காட்சிகளுக்கும் ஓர் இயற்கை களஞ்சியமாக இருக்கின்றன. இம்மூன்று பள்ளத்தாக்குகளில் ச்சுத்தாங்(Qutang) பள்ளத்தாக்கு மிக அற்புதமாகவும் செங்குத்தாகவும் காணப்படுகின்றது. உசியா பள்ளத்தாக்கு மிக ஆழமானதாகவும் அழகானதாகவும் காணப்படுகின்றது. சிலிங் பள்ளத்தாக்கு மிகவும் செங்குத்தான பாறைகளை கொண்டதாக உள்ளது.
யாங்சி நதியின் வட கரையின் மீது உள்ள ச்சுதாங் (Qutang) பள்ளத்தாக்கு நுழைவாயிலை காப்பது ஒரு புகழ்பெற்ற வரலாற்று நகரம் ஆகும். இது பைதிசெங் அல்லது வெள்ளை அரச நகரம் என அழைக்கப்படுகின்றது. இந்நகரத்தின் பெயர் ஓர் உண்மைக் கதையில் இருந்து வந்தது.
ஏறத்தாழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்சி செய்த மேற்கு ஹன் அரச வம்சம் ஒரு கலகத்தால் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டது. ஒரு புதிய மத்திய அரசாங்கம் தாபிக்கப்படுவதற்கு முன்னர் தொங் சுன் சூ (Gongsun Shu) என அழைக்கப்படும் ஒரு உள்நாட்டு இராணுவத் தலைவர் சூ அரசை (இன்றைய சுச்சுவான் மாநிலம்) ஆட்சி செய்தார். கதையில் சொல்லப்படுவது போன்று, கொங் சுன் சூ ஒரு முறை ஒரு கனவு கண்டான். அக்கனவில் யாரோவொருவர் அவன் 12 வருடங்களாக அரசனாக இருந்ததாக அவனுக்கு சொன்னார். இரண்டாம் நாள் ஒரு வெள்ளை நாகத்துடன் தொடர்புடைய வெள்ளை ஆவியை கக்கும் ஒரு கிணற்றை அவன் கண்டான். எனவே, அவன் தானாகவே வெள்ளை அரசன் என்றும், பைதிசெங் நகரம் என்றும் மறு பெயரிட்டான்.
அவனுடைய நண்பன் மா யுவான் அவனுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால், கொங் சு சூ உடை போன்ற அற்பமான பொருட்களில் அதிகம். கவனம் செலுத்துவதை அவன் கண்டான்.
கொங் சுன் சூ ஒன்றையும் அடைய மாட்டான் என்பதை நம்பிக் கொண்டு அவந் புறப்பட்டான்.
இறுதியாக, கொங் சு சூ, சக்கரவர்த்தியாக இருந்த 12 வருடங்களுக்கு பின்னர், லியூ சியூ உடன் சம்டை செய்து தோற்கடிக்கப்பட்டு சொல்லைப்பட்டான். லியூ சியூ நாட்டை மீண்டும் ஒருமைப்படுத்தியதுடன் கிழக்கு ஹன் அரசு பரம்பரையின் முதல் சக்கரவர்த்தியாகவும் வந்தான். கொங் சு சூ தனது ஆட்சிக்காலத்தில் தனது சிறிய மாநிலத்தின் பாதுகாப்பையும் அபிவிருத்தியடைந்த ஒரு பண்ணையையும், நீர்ப்பாசன முறையையும் ஏற்படுத்தினான். அவனின் நினைவுக்காக உள்நாட்டு மக்கள் அவனுக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள்.
மூன்று பள்ளத்தாக்குப் பிரதேசம் பற்று வேறு பல கதைகளும் உள்ளன. இன்று மூன்று பள்ளத்தாக்கு வழியாக மிகப் பெரிய அணை ஒன்று கட்டப்படுகின்றது. சில வரலாற்று இடங்களும் சுற்றுலா இடங்களும் நீரில் கீழ் மூழ்கடிக்கப்படும். ஆனால், திட்டம் பூர்த்தியாகிய பின்னர், இது பார்வையாளர்களும் பள்ளத்தாக்கை இரசிப்பதற்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
|