• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[அதிசயங்கள் பற்றிய கதை]

ஷென்யாங் அரச மாளிகை

சீனாவில் இரண்டு பெரிய மாளிகைகளில் ஒன்று ஷென்யாங் அரசு மாளிகை ஆகும். பெய்சிங்கிலுள்ள ரகசிய நகரத்துக்கு அடுத்தப்படியானது. இது முழுமையாக மஞ்சுக்களால் கட்டப்பட்டது.

இது வேறுபட்ட மஞ்சூரியன் கட்டிடக் கலையினைக் கொண்டிருக்கின்றது.

ஷென்யாங் நகரம், வட கிழக்கு சீனாவில் ஒரு கனரகத் தொழில் நகரமாகும். இது சீனாவின் கடைசி பிரபுத்துவ வம்சமான ச்சிங் வம்சத்தின் ஆரம்ப தலைநகராகும். இந்த மாளிகையானது, முதல் அரசனான நுர்ஹசி அரசன் காலத்தில் 1625ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அரசன் இறந்த போது அவனுடைய மகன் ஹுவாங் தை ஜி, வேலையைத் தொடர்ந்து பூர்த்தியாக்கினான். ச்சிங்கின் படைகள் சீனப் பெரும் சுவரை வெற்றி கொண்ட பின்னர் ச்சிங்கின் ஆளுநர் அவர்களுடைய தலை நகரத்தை பெய்சிங்கிற்கு மாற்றினார்.

         

இந்த அரண்மனை பல்வேறு பிரிவுகளைக் கொண்டது. மாளிகையின் கிழக்குப் பகுதி தாஜெங் மண்டபத்தையும் பத்து இராஜ அரங்கையும் கொண்டுள்ளது. தாஜெங் மண்டபம் அரசன் அன்றாட அலுவல்களை கையாளுகின்ற இடமாகவும் பத்து இராஜ மண்டபம் முக்கியமான அலுவலர்களுக்கான அலுவலகமாகவும் இருந்தது. இவைகள் மஞ்சூ மக்களால் பயன்படுத்தப்பட்ட கூடாரங்களை பெரிதும் ஒத்திருக்கின்ற உண்மையான மண்டபங்களாக உள்ளன.

இந்த மாளிகையில், மஞ்சூரியன் பண்பாட்டின் பல பண்புகளைக் காணலாம். மாளிகையில் மத்தியில் ஒரு மரக்கம்பம் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதன் உச்சியில் தட்டு ஒன்று இருக்கின்றது. இது காகங்களுக்கு உணவு வழங்க பயன்பட்டது. இக்காகங்கள் ச்சிங் நுர்ஹசியின் உயிரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றியதாக நம்பப்பட்டது. இவை, மஞ்சூரியன் பாணியைக் கொண்டிருக்கின்றன. வசிப்பிடங்களின் கூரைகள் சபாமண்டபங்களின் கூரைகளைவிட உயரமானதாக இருந்தன.

இம்மாளிகை பல வருடங்களுக்கு மேலாக பெரிதாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. இது சில ஹன், திபெத்தியன், மொங்கோலியன் கட்டிடக்கலை பாணியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040