• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[அதிசயங்கள் பற்றிய கதை]

லு ஷான் மலையின் கதை

தெற்குச் சீனாவின் ஜியாங்சி மாநிலத்தில் இருக்கும் லு ஷான் மலை கம்பீரமான மலை உச்சிகளுக்கும் செங்குத்தான பள்ளத்தாக்குகளுக்கும் தொங்கிக் கொண்டிருக்கும் பாறைகளுக்கும் மற்றும் அருவித் தொடர்களுக்கும் பிரசித்தமானது. இது அனேக கவிஞர்களுக்கும் கல்விமான்களுக்கும் எண்ணற்ற படைப்புக்களை தொகுப்பதற்கு ஊக்கமளித்தது. தாங் வமிசத்தின் பிரபலக் கவிஞரான லி பெய் இவ்வாறு ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

"சூரியனுக்குக் கீழே கொழுந்துவிட்டு எரியும் நீலப் புகையோ,

அன்றி, தொலைவில் இருந்து தோன்றும் அருவிப்புகையோ?

ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து வீழும் நீர்த்தாரை,

சொர்க்கத்தின் பால்வீதயோ என எண்ணத் தோன்றும்."

சொங் வமிசத்தைச் சேர்ந்த மற்றொரு திறமையான கவிஞர் சு தொங்போ இவ்வாறு எழுதுகிறார்:

"மலையின் நடுவில் இருக்கும் போது அது எப்படித் தோற்றம் தருகிறது என எவ்வாறு சொல்வது?"

"குவாங்லு"அல்லது "குவாங் மலை"என்றும் லுஷான் அழைக்கப்படுகிறது.

கி.மு.4ம் நூற்றாண்டில் குவாங்சு எனும் பெயருடைய துறவி ஒருவர் அந்த மலையில் மறைந்திருந்து தாவோ இயல் படித்தார்.

வமிச பேரரசர் தனது அரசவையில் அதிகாரியாக சூ பணியாற்றும் படி அவரை அழைத்தான். ஆனால் குவாங் சுக்கு ஒரு போதும் அரசரின் அழைப்பு கிடைக்கவில்லை. பின்பு குவாங் சு மறைந்ததும், மக்கள் அவரின் இடத்தை தெய்வீகக் குடில் என அழைத்தனர். அதிலிருந்து இந்த மலை லு ஷான் மலை அல்லது குவாங்லு என அழைக்கப்பட்டது. டொங்லின் மடாலயம் லு ஷான் மலையின் அடிவாரத்தில் புத்த மதத்தின் பிரிவுகளில் ஒன்றான புனித பூமியின் ஷ்தாபகரான குய்யுவன் எனும் துறவிக்காக 386ல் கட்டப்பட்டது. மக்கள் அவரை பயபக்தியுடன் வணங்கினர். மடாலயங்கள் பின்னர் தென் சீனாவின் புத்த மத நிலையங்களாக மாறின. குய்யுவன் அடிக்கடி கட்டிடப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்படுமோ என்று கவலைப்பட்டார். ஓர் இரவு, அங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அடு்தத நாள் காலை, அந்த துறவிகள் மகிழ்வூட்டக்கூட தென்றைக் கண்டார்கள். அது ஆலயத்திற்கு முன்னால் ஒரு குளம் காணப்பட்டதுடன் அது புரத்துண்டுகளால் நிரப்பப்பட்டிருந்தது. அந்த மடாலயம் கட்டிமுடிக்கப்பட்டு, கியு யுவானால் அந்தக் குளம் மர வீட்டுக் குளம் எனப் பெயரிடப்பட்டதுடன் மரத்தால் கட்டப்பட்ட மண்டபம் கடவுள் அனுப்பிய மண்டபம் எனப்பட்டது.

மடாலயத்திற்கு முன்னால் இருந்த அழகான குளம் வெள்ளைத் தாமரைகளால் நிரப்பப்பட்டது.

பிரபலமான யாத்திரீகரான கிழக்கு ஜின் அரச வம்சத்தின் சியே லிங்குவன் கி.மு.4ம் நூற்றாண்டில் இக்குளத்தை தோண்டியதாகவும் கதை சொல்கிறது. பெரிய பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த சியே குய் யுவனால் உருவாக்கப்பட்ட கவிஞர்கள் சமூகத்தில் இணைந்து கொள்ள விரும்பினார்.

அவர் பின்பு சியேயிடம் முதலில் மூன்று தாமரைக் குளங்களை வெட்டித்தரும் படி கேட்டதுடன் அவரது மனம் தாமரையின் இதழ்கள் போல் தூய்மையாகும் வரை பொறுத்திருந்து பின்னர் சேரக் கூடியதாக இருக்கும் என்றார். அந்த வகையில் கீ குளம்களை வெட்டியதுடன் பின்னர் அந்த இருவரும் மிகவும் நல்ல நண்பர்களாக மாறினார்கள்.


1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040