• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பழ மொழி கதைகள்]
கொங்ரொங்கின் சிறு வயது சாமர்த்தியங்கள்

கொங் ரொங் கி. பி. 200 இல் வாழ்ந்த ஒரு மிகப் புகழ்பெற்ற அறிஞர். இவர் உயர்ந்த சிந்தனையாளர். கொன்புசியங்சின் பரம்பரையில் வந்தவர். இவர் சிறுவயது முதலே உயர்ந்த புத்திசாலியாகவும் இருந்தார். அவருடைய பல கதைகள் ஜி ஜீஒ சின் யு அல்லது உலகத்தின் புதிய கட்டுக்ககைகளின் தொகுப்பு என்ற புத்தகத்தில் புதிய செய்யப்பட்டுள்ளது.

கொங் ரொங் அவருடைய தந்தையுடன் லொ யாங்குக்குச் சென்ற போது அவருக்கு பத்து வயது மட்டுமே. அந்த நேரத்தில் லி யுவன் லி என்ற உயர் ஆயவாளர். நாட்டில் நற்புகழ்பெற்றிருந்தார். அவருடைய அலுவலத்துக்கு அவருடைய சொந்தக்காரர்களும் குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்டவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வேறு ஒருவரும் செல்ல முடியாது.

"நான் உங்கள் குருவின் ஒரு சொந்தக்காரன்" என ஒரு சிறுவன், வாயிலில் உள்ள காவலாளியிடம் கூறினான். காவலாளி அவனை உள்ளே செல்ல அனுமதித்தான்.

சிறுவனைப் பார்த்த லி யுவன் லி ஆச்சரியப்பட்டார். "எனக்கும் உணக்கும் இடையில் என்ன உறவு இருக்கிறது" எனக் கேட்டார்.

"பல பழைய காலத்தில் என்னுடைய மூதாதையராகிய கொன்புசியங் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்க உங்களுடைய மூதாதையர் லாஒ சியிடம் அடிக்கடி அறிவுரை கேட்டார். இது அவர்களிடையே ஓர் ஒரு சீடன் உறவை உருவாக்கியது. எனவே நமது இரு குடும்பங்களும் பல தலைமுறைகளாக மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்தன" என அச்சிறுவனிடம் இருந்து பதில் வந்தது.

லி யுவன் லியும் மற்றும் அவருடன் இருந்த ஏனைய விருந்தினரும் இந்த விடையை கேட்டு பெரிய ஆச்சரியத்தை அடைந்தனர்.

சென் வெய் அக்காலத்தில் இருந்த இன்னொரு புகழ்பெற்ற அறிவாளி. அவர் பின்னர் "சிறு வயதில் புத்திசாலியாக இருப்பதனால் அவன் வளர்ந்த பின்னர் எல்லாவற்றையும் சாதிப்பான் என்று கருத முடியாது" என கூறினார். இதற்கு கொங் ரொங், "நீங்கள் சிறு வயதில் மிக புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கின்றேன்" என கூறிய பதில் சென் வெய்யை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியது.

கொங் ரொங் பற்றியும் அவருடைய குழந்தைப் பருவத்தின் நற்பண்பு பற்றியும் இன்னொரு கதை இருக்கிறது. அவருடைய குடும்பம் ஒன்ராகச் சேர்ந்து பேரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவர் எப்போதும் மிகச் சிறிய பேரிக்காயையே எடுப்பார். நீ ஏன் பெரிய காயை எடுக்கவில்லை எனக் கேட்ட போது, "நான் மிகச் சிறியவன். நான் மிகச் சிறியதை எடுப்பதுதான் சரி. நான் எனது மூத்த சகோதரர்களையும் சகோதரிகளையும் பெரியதை சாப்பிட அனுமதிக்க வேண்டும்" என நால்வரில் ஒருவரான அச்சிறுவன் பதிலளித்தான்.

கொங்ரொங் வளர்ந்து பெரியவராகி ஒரு உள்ளூர் அதிகாரி ஆனார். அவர் நன்கு பிரபலமான அறிவாளியானார். எனினும் அவர் ஓர் குழப்பமான காலத்தின் போது சாவோ சாவோ என்ற அக்காலத்தில் முக்கியமான ஓர் அரசியல்வாதியால் கொலை செய்யப்பட்டார்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040