• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பழ மொழி கதைகள்]

நூறு அடி தள்ளியிருந்து வில்லோ இலை மீது அம்பு எய்தது

போரிடும் அரசுகள் காலத்தில் ச்சின் மாநில அரசன், அவனுடைய தளபதியான பைச்சியை வெய் மாநிலத்தைத் தாக்குவதற்கு அனுப்பினான். பைச்சி, இராணுவ வல்லமை மிக்கவன், ஒரு போரிலும் தோற்றதில்லை அரச கட்டளையால் அனைவரும் திகைத்தனர். வெய் மாநிலம் முற்றுகையிடப்பட்டால் அது எல்லோரையும் பாதிக்கும் ஓர் அதிர்வு அலையை அனுப்பும் என்ற காரணத்தால் மாநிலங்களுக்கு இடையில் மிகப்பெரிய வயம் மேலோங்கி இருந்தது. எனவே சு லி எனப்படும் ஒருவர் பைச்சியை பார்த்து போர் செய்ய வேண்டாம் என எடுத்துக் கூறும்படி தூது அனுப்பப்பட்டார்.

சூ மாநிலத்தில் யங் யோ ஜி என அழைக்கப்படுகின்ற ஒரு புகழ்மிக்க வில்லாளி இருந்தார். இவர், ஒரு நாள் பன் கூ என்ற இன்னெரு நன்கு பிரபலமான வில்லாளியைச் சந்தித்தார். யார் வில்லவித்தையில் சிறந்தவர் என்பதை அறிய வேண்டும் எனத் தீர்மானித்தார். போட்டியைக் காண பெரிய மக்கள் கூட்டம் திரண்டது.

50 அடிக்கு அப்பால் உள்ள ஓர் பலகையின் மத்தியில் உள்ள ஓர் சிவப்புப் புற்றி குறியாக்கப்பட்டது. பன் கூ விரைவாக அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அம்புகளை செலுத்தினான். அவை அனைத்தும் சிவப்பு இலக்கைத் தாக்கியது. பார்வையாளர்கள் ஆரவாரித்தனர்.

யாங் சுற்றுமுற்றும் பார்த்து

"50 அடிதூரத்தில் உள்ள சிவப்பு புள்ளியைத் தாக்குவது ஓர் சிறிய விஷயம். ஆனால், என்னால் 100 அடி தூரத்தில் உள்ள வில்லோ மாத்தின் இலையை அம்பால் அடிக்க முடியும்" எனக் கூறினான். பின்னர், அவன் நூறு அடி தூரத்தில் உள்ள மரத்தை சுட்டிக் காட்டினாரன். அதன் இலையை தெரிவு செய்து அதில் சிவப்பு நிறம் தீட்டும் படி ஒருவரிடம் கூறினான். ஓர் வில்லின் நாண் ஒலியுடன் விருபட்ட அம்பு காற்றைக் கிழித்துக் கொண்டு, சிவப்பு இலையின் மத்தியைத் தொட்டது. மக்கள் ஆச்சரியப்பட்டனர். பான் கூ ஒவ்வொரு தடவையும் மர இலையை யாங்கினால் தாக்க முடியும் என்பதை நம்ப வில்லை. எனவே, அவன் அம்மரத்துக்குச் சென்று மூன்று இலைகளைத் தெரிவு செய்தான். அவ்விலைகளில் குறியிட்டு அவற்றை முறையே தாக்கும் படி யாங்கிடம் கூறினான்.

யாங் தனது வில்லை எடுத்து முன்று அம்புகறை ஏவினான். ஒவ்வொரு அம்பும் தெரிவு செய்யப்பட்ட இலைகளின் மத்தியை சரியாகத் துளைத்து சென்றன. கூட்டம் கரவொலி எழுப்பியது. யாங் தனது திறமையால் பெருமிதம் கொண்டான். ஆனால், உடனே அவனுக்கு அருகில் ஒருவர் அவனுக்கு இன்னும் சில கட்டளைகள் தேவை என கூறுவதைக் கேட்டான். இதைக் கேட்ட யாங் மிகவும் கோபமடைந்தான். இதைக் கூறிய மநிதனைக் கண்டான். "நீ எனக்கு வில் வித்தை கற்பிக்க விரும்புகிறாயா?" என அவன் அவரை விரைவினான்.

அம்மனிதன் அமைதிதயாக விடைபகர்ந்தான், "நான் இங்கு உனக்கு வில் வித்தை கற்பிக்க வரவில்லை. ஆனால் நீ உனது புகழை எவ்வாறு கட்டிக்காப்பது என்பதை உனக்குத் தெரிவிக்க வந்திருக்கிறேன். நீ இங்கு ஒரு நீண்ட நேரம் இருந்திருக்கிறாய். நீ களைப்பாக காணப்படுகின்றாய். நீ தொடர்ந்து எய்து ஓர் அம்பைக் கூட தவறவிட்டால் உனது புகழ் முற்றிலும் அழிந்து விடும். ஓர் சிறந்த வில் வித்தை நீரன் தனது புகழை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீ இப்போது நிறுத்த வேண்டும்".

பின்னர், சுலி, பைச் சியை பின் வருமாறு அறிவுறுத்தினான். "நீ உனது வாழ்க்கையில் ஒரு போதும் ஓர் சண்டையில் கூட தோல்வி அடைந்தது இல்லை. வெய் மாநிலம் இலகுவில் தோற்கடிக்கப்படக் கூடியதல்ல. உன்னுடைய புகழ் முற்றாக அழிந்து போகும் என்பதில் பயமடையவில்லையா? சண்டை நீடித்தால் உன்னால் வெய்யை கைப்பற்ற முடியுமா?"அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, ச்சி தளபதிய அமைதி அடைந்தான். இறுதியாக அவன் தனது உடல் நலத்தைக் காரணம் காட்டி வெய் தேசத்தின் மீது போர் தொடுக்காமல் ஒதுங்கினான்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040