• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பழ மொழி கதைகள்]

துங்பாங் செள படிஅரிசியை கேட்கிறார்
 
கி.மு.200ம் ஆண்டில் வாழ்ந்தத் துங்பாங் செள, மேற்கு தேச ஹன் சக்கரவர்த்தி ஊதியின் கீழ் அரசவைப் புலவனாக அதிகாரம் பெற்றிருந்தான். அவன் சிறந்த எழுத்தாளன். அவன் சிறந்த நகைச்சுவை ஆற்றலையும் பெற்று இருந்தான். அவனுடைய தன்னம்பிக்கையும் சாமர்த்தியமான பேச்சும் அவனை சக்கரவர்த்திற்கு மிகவும் பிரியமானவனாக ஆக்கியிருந்தது. அவனைப் பற்றிய கதைகள் சீனாவின்அடிம்ட்ட மக்களிடையே மிகவும் பரவியது.

அவன், ஹன் தலைநகரத்தில் ஒரு கீழ் மட்ட அதிகாரியாகப் பணியாற்றிய போது அரச குடும்பத்திற்கான குதிரைகளைப் பராமரிக்கும் குள்ளர்கள் சக்கரவர்த்தியுடன் பழகுவதற்கு அரிகமான வாய்ப்புக்களை கொண்டிருந்ததை கவனித்தான். இதை, சக்கரவர்த்தியின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு அவன் ஒரு கதையைக் கட்டினான். குள்ளர்களால், நாட்டுக்கு பிரயோசனம் இல்லாததால் அவர்களை கொல்வதற்கு மன்னன் திட்டமிடுவதாக குள்ளர்கள் அவனின் உதவியைக் கேட்டார்கள். அடுத்தமுறை குள்ளர்கள் சக்கரவர்த்தியைப் பார்க்கும் போது, மண்டியிட்டு மன்னிப்புக் கேட்குமாறு கூறினான். அவர்கள் அப்படியே செய்தனர். குழப்பமடைந்த அரசன் ஏன் ஏனக் கேட்டான். அவர்கள், துங் பாங்செள கூறியதைத் திருப்பிக் கூறினார்கள். சக்கரவர்த்திக்கு முன்னால் வரவழைக்கப்பட்ட போது, குள்ளர்கள் ஒரு மீட்டர் மட்டும் உயரமுடையவர்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு பை அரிசியும் 200 நாணயங்களும் கொடுக்கப்படுகின்றன. நான் அவர்களை விட இரண்டு மடங்கு உயரமுடையவன். எனக்கும் அதே அளவு அரிசியும் நாணயமும் கொடுப்பதால் நான் பட்டினி சாவை எதிர்கொள்கின்றேன். மாட்சிமை தாங்கிய மன்னரே, நான் செல்லும் கருத்தை நீங்கள் ஒப்புக்கொண்டால், ஊதிய கொடுக்கும் முறையை மாற்றங்கள் என்று துங்பாங்செள கேட்டுக்கொண்டான்.

மனமகிழ்ந்த சக்கரவர்த்தி ஊதி அவரை மன்னித்ததோடு அவனை தனது நெருங்கிய உதவியாளனாக பதவி உயர்த்தினான். இன்னொரு முறை அரசன் தனது உணவின் இறைச்சியில் சிறியளவை தன்னுடைய உதவியாளர்களுக்குக் கொடுத்தான். வடிமையாக அலுவலர்கள் அரச கட்டளை வாசிக்கப்பட்ட பின்னர்தான் இறைச்சியை எடுக்கத்தொடங்குவார்கள். ஆனால், துங்பாங்செள அதற்கு முன்ரே எடுத்துக்கொண்டு நேராக வீட்டுக்குத் திரும்பினார். ஊதித்து பற்றி கேட்ட போது, அவர் நான் தை பிரியசாலியாக இருப்பதால் அரச கட்டளை வாசிக்கப்படுவதற்கு முன்னர் இறைச்சியை எடுத்துச் சென்றேன். நான் சுய கட்டுப்பாடு உடையவன். எனவே, ஒரு துண்டு இறைச்சியை மட்டுமே எடுத்தேன். மேலும் நான் ஒரு நல்ல மகனாக இருக்கின்ற காரணத்தால் இறைச்சியை நேரே வீட்டுக்கு பெற்றோருக்காக எடுத்துச் சென்றேன். நான் இந்த எல்லா நற்குணங்களையும் கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த தண்டளையும் தரக்கூடாது என விடைப்பகாற்தான்.

சக்கரவர்த்தி வாய்விட்டு சிரித்தார். துங்பாங்செள மீண்டும் ஒரு முறை பதவி உயர்வு பெற்றான்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040