• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பழ மொழி கதைகள்]

அனைவருக்கும் அதிர்ச்சியூட்டிய காகத்தின் கரைச்சல்

இந்தக் கதை போரிடும் நாடுகள் காலப்பகுதியில் கி. மு. 900க்கும் கி. மு. 500க்கும் இடையில் நிகழ்ந்தது. இந்தக் காலத்தில் ஒவ்வொரு நாடும் மேலாதிக்கத்துக்கு வருவதற்கு சண்டையிட்டன.

ச்சி நாட்டின் புதிதாக அரியணை ஏறிய வெய்வாங் என்ற அரசன் புதிதாகக் கிடைத்த அதிகார போதையால் தன்னை மறந்தான். அவன் மகுடம் தரித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தாறுமாறான வாழ்க்கையை நடத்தினான். தன் நேரத்தை வேட்டையாடுவதிலும் குடிப்பதிலும் மற்றும் பெண்களுடனும் விரயமாக்கி, அரசாட்சியை மறந்தான். அந்நாடு பலமிழந்தது. மேலும் பலமான நாடுகளுக்கு இரையானது.

அரசரின் ஆலோசகர் சுன் யு சன் இதை மன்னரின் கவனத்திற்குக் கொண்டு வரத் தீர்மானித்தார். அவர் "ஒரு பெரிய பறவை அரண்மனையிலுள்ள ஒரு மரத்தில் வசித்து வருகின்றது. ஆனால் மூன்று வருடங்களாக எவ்வித குறிக்கோளும் இல்லாது மரத்தின் கிளைகளில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. மன்னரே தங்களுக்கு இது என்ன பறவை என்று தெரிகிறதா?" என கூறினார்.

இளைஞனான அந்த அரசன், சுன் யு சன் தன்னையே குறிப்பிடுகின்றான் என உடனடியாகப் புரிந்து கொண்டான்.

சிறிது யோசனைக்குப் பின் அந்த அரசன், "அந்தப் பறவை இப்பொழுது பறக்க வில்லை. ஆனால் எப்பொழுது பறக்கிறதோ அப்பொழுது சரியாகக் குறிபார்த்து வானத்தின் உச்சி வரை செல்லும். இது இப்பொழுது கரையவில்லை. ஆனால் எப்பொழுது கரைகிறதோ அப்படி வல்லமையுடன் இது கத்தும் போது அது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்" எனப் பதிலளித்தான்.

அந்த அரசன் அத்துடன் மாற தொடங்கினான். அவன் தன் அரசியல் முறைகளை சீரமைத்தான். அதனால் அதிகாரிகளுக்கிடையில் ஊழல்கள் இல்லாது ஒழித்தான். அத்துடன் அவன் பலமான இராணுவத்தையும் கட்டியெழுப்பினான். அவனது அரசு விரைவில் புதுத் தோற்றத்துடன் விளங்கியது. ஏனைய அரசுகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், படையெடுக்கும் தமது யோசனையையும் விரைவில் கைவிட்டன. அந்தப் பறவையாகிய வெய்வாங் அரசன் ஒரு முறை கரைந்தான். அது அனைவருக்கும் அதிர்ச்சியானது.

ஒரு பறவை கரைந்து எல்லோருக்கும் அதிர்ச்சியளித்தது என்பது இவ்வாறாக ஒரு பழமொழியாகியது. திறமையுடையவன். எதையும் சாதிக்க முடியும். அவன் தான் தெளிவாக அறிந்து கொள்வதோடு அதை திறம்படச் செய்வதையும் நிச்சயித்துக் கொள்ள வேண்டும். இதையே பழமொழி தொடர் உணர்த்துகிறது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040