|
![]() |
ஓர் அழகியின் புன்னகையும் ஒரு வம்சத்தின் வீழ்ச்சியும்
அரசன் யோ, கி.மு.எட்டாவது நுற்றாண்டுக் காலத்தில் மேற்கு ஜோ வம்சத்தின் இறுதி அரசனாக இருந்தான். எதுக்குமே லாயக்கற்ற அரசன் யோ, தன்னுடைய வைபாட்டிகளில் ஒருத்தியான பெளசியின் காலடியிலேயே விழுந்து அவனுடைய ஆட்சிக்கால கிடந்து நாட்டிற்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளை புறக்கணித்தான். வல்லமை மிக்க ஆட்சியாறர்களையும் தீபத்தால் முட்டாள் ஆக்குகிறது என்ற பிரபலமான ஒரு கதை அரசனைப் பற்றி வழங்கி வந்தது.
பெளசி மிகவும் கெளரவிக்கப்பட்டாள் ஆனாலும் அவள் ஒரு போதும் ஒன்றைப் புன்னகை கூட செய்தில்லை. அரசன் யோ, அவள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க பல வழிகளில் முயற்சித்தான். ஆனால், அவன் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தான்.
ஒரு நாள் அவர்கள் இருவரும் லிஷான் மலைக்கு சுற்றுலா சென்றனர். அரசுன் மலையின் மீது கட்டப்பட்ட எச்சரிக்கை கோபுரங்கள் செயல்படும் முறைகளை விவரித்தான்.
அக்காலத்தில் எச்சரிக்கைக் கோபுரங்கள், நாட்டிற்கு அன்னியப் படையெடுப்பு இருந்த அங்காலத்தில் செய்திகளை ஆட்சியாளர்களுக்கு அனுப்புவதற்காக கட்டப்பட்டன. பிரபுக்களும் இளவரசர்களும் எச்சரிக்கை தீப வெளிச்சத்தைப் பார்த்தவுடன் ஆபத்தில் இருந்து காப்பாற்ற ஓடிவருவார்கள். ஆனால், பெளசி, இதை நம்பவில்லை. இது பற்றி சந்தேகம் கொண்டாள். எனவே, ஆரசன் எச்சரிக்கை கோபுரம் மீது தீ எரிக்கும் பிட உத்தர விட்டான். சில நிமிடங்களில் நெருப்பு எரிந்து வாணில் எட்டியது. உடனே, மன்னர்கள் தங்களது படைகளை லிஷான் மலைக்கு அனுப்பினார்கள். அவர்கள் அரசனும் பெளசியும் குதுகலமாக குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டதுடன் தாங்கள் முட்டாளாக்கப்பட்டதை உணர்ந்து எரிச்சல் அடைந்தனர். ஆனால், பெளசி அகத்தையுற்ற பிரபுக்கள், இளவரசர்களின் எரிச்சலுற்ற முகங்களையும் திரும்பும் படைகளின் ஆரவாரத்தையும் கண்டும் கேட்டும் வாய்விட்டுச் சரித்தாள்.
பின்னர், அரசன் யோ, தனது வேடிக்கை விளையாட்டை திரும்பவும் செய்தான்.
கி.மு.771 இல், அரசன் யோ, தனது அரசிக்குப் பதிலாக பெளசியை பட்டத்து ராணியாக்கிய பின்னர், தலைநகர் தாக்கப்பட்டது. இத்தாக்குதலானது, முன்னாள் அரசியின் தந்தையான கேவவல்லமை படைத்த ஷென் மன்னரும் காட்டுமிராண்டிகளும் சேர்ந்து தாக்கினார்கள். எச்சரிக்கைத் தீ ஏற்றப்பட்டது. ஆனால், ஒரு படை வீரர் கூட அவர்களைக் காப்பாற்ற வர வில்லை. அரசன் யோ, கொல்லப்பான். பெளசி சிறைபிடிக்கப்பட்டாள். மேற்கு ஜோ வம்சம் ஒரு அழகியின் சிரிப்பால் சின்னாபின்னமானது.
|