ஹுன் வம்ச ஆட்சியின் பேரரசர் லியூ பாங்
லியூ பாங் என்பவர் மேற்கு ஹான் வம்ச ஆட்சியின் (கி.மு 206ஆம் ஆண்டு முதல் கி.பி 220ஆம் ஆண்டுவரை)முதலாவது பேரரசர். சீன வரலாற்றில் செல்வாக்கற்ற குடும்பத்தில் பிறந்த இரண்டு பேரரசர்களில் இவரும் ஒருவர்.
லியூ பாங் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ச்சின் வம்ச காலத்தில் அவர் ஊராட்சி அதிகாரியாக இருந்தார். மற்றவருடன் இணக்கமாக இருக்கக் கூடிய அவர் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. சிறையில் இருந்த குற்றவாளிகளை விடுவித்ததால் மாங் மற்றும் தாங் மலைகளில் ஒளிந்திருந்தார். கி.மு. 209ஆம் ஆண்டு தனது ஊரில் உள்ளவர்களைத் திரட்டி, சென் செங், வூ குவாங் தலைமையிலான விவசாய படையின் கிளர்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், லியூ பாங் பெரும் எண்ணிக்கையிலான படை வீரர்களுக்குத் தலைமை தாங்கி ச்சின் வம்ச ஆட்சியின் தலைநகரான சியன் யாங்கைத் தாக்கிக் கைப்பற்றி, ச்சின் வம்ச ஆட்சியைத் தூக்கியெறிந்தார். அவர் சியன் யாங்கில் ச்சின் வம்ச ஆட்சியின் கொடுமைமிக்க சட்டத்தை நீக்கினார். குவான்சுங் (இன்றைய ஷென் சி மாநிலத்தின் வெய் ஹோ ஆற்றுப் பள்ளத்தாக்குப் பிரதேசம்)வட்டாரத்தில் பொது மக்களுடன் இணைந்து சட்டமியற்றினார். அதாவது, மற்றவரை கொலை செய்தவர் இறக்க வேண்டும், மற்றவரை காயப்படுத்தியவரும் திருடரும் தண்டிக்கப்பட வேண்டும். இது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர், லியூ பாங்கின் படையும் ச்சின் வம்சத்தை எதிர்க்கும் தளபதி சியாங் யூ தலைமையிலான இன்னொரு கிளர்ச்சிப் படையும் நான்கு ஆண்டுகள் ச்சு-ஹான் போரை நடத்தின. கி.பி, 202ஆம் ஆண்டு லியூ பாங் 3 லட்சம் படையினருக்கு தலைமை தாங்கி, சியாங் யூவைச் சுற்றிவளைத்துத் தாக்கினார். சியாங் யூ தற்கொலை செய்தார். லியூ பாங் வெற்றி பெற்றார். கி.பி, 202ஆம் ஆண்டு ஷான்துங்கில் தன்னை பேரரசராக நியமித்து, ஹான் வம்சத்தை நிறுவினார்.
திறமைசாலிகளைப் பயன்படுத்துவதில் லியூ பாங் தேர்ச்சி பெற்றவர். எனவே நெருக்கடியான நிலையில் அவரால் ஆபத்தான நிலைமையை பாதுகாப்பான நிலைமையாக மாற்ற முடியும். லியூ பாங் ஹான்துங்கை அடைந்த போது, துவக்கத்தில் படைவீரர்கள் சிலர் தப்பி ஓடினர். ஹான் சின் எனும் ஒரு சிறிய அதிகாரியும் தப்பி ஓடினார். சியோ ஹோ அது பற்றி அறிந்ததும் அவரை விரட்டிச் சென்று பிடித்தார். அதையடுத்து அவர் இந்த சிறிய அதிகாரியை லியூ பாங்கிடம் பரிந்துரை செய்தார். அப்போது ஹான்சின் பலருக்கு தெரியாத ஒரு சிறிய அதிகாரி தான். ஆனால் சியோ ஹோவின் யோசனையைக் கேட்டு, ஹான்சின்னை பெரிய தளபதியாக லியூ பாங் நியமித்தார். பின்னர் ச்சின் வம்ச ஆட்சியைத் தூக்கியெறிந்த போரில் ஹான்சின் பெரும் பங்காற்றினார்.
லியூ பாங் ஆட்சியை பெற்றதில், ஹொங் மென் விருந்து மிகவும் ஆபத்தானது. அப்போது, சியாங்யூவின் படை லியூ பாங்கின் படையைவிட வலுவானதாக இருந்தது. லியூ பாங்கை ஒழித்து தானே பேரரசராக அவர் விரும்பினார். இதை லியூ பாங் அறிந்த பின்னர், தனது ஆலோசகர் சாங் லியாங்குடன் ஹொங் மென்னுக்குச் சென்று சியாங்யூவிடம் மன்னிப்புக் கேட்டார். அப்போது, லியூ பாங்கை கொல்ல வேண்டும் என்று சியாங்யூவின் ஆலோசகர் கூறினார். விருந்தின் போது, சியாங்யூவின் தளபதி சியாங் ச்சுவாங் வாள் வீசி, லியூ பாங்கை கொலை செய்ய முயன்றார். இதை சாங்லியாங் பார்த்து லியூ பாங்கை பாதுகாக்குமாறு லியூ பாங்கின் காவலரை அழைத்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர், கழிவு அறைக்குச் செல்ல வேண்டும் என்ற சாக்கு சொல்லிவிட்டு காவலரின் பாதுகாப்புடன் சிறிய பாதை வழியாக படை முகாமுக்கு லியூ பாங் திரும்பினார். பின்னர், சாங் லியாங் கூடாரத்தில் நுழைந்து சியாங்யூவிடம் பிரியாவிடை பெற்று, அன்பளிப்பு சமர்ப்பித்தார். லியூ பாங் ஏற்கனவே புறப்பட்டுச் சென்று விட்டதாகவும் கூறினார். இதுதான் வரலாற்றில் புகழ்பெற்ற ஹொங் மென் விருந்து நிகழ்ச்சியாகும். பின்னர், லியூ பாங் தனது ஆற்றலைப் பெருக்கி, இறுதியில் சியாங்யூவை தோற்கடித்து சி ஹான் வம்ச ஆட்சியை நிறுவினார்.
1 2 3 4 5 6