• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால பேரரசர்கள்]

மிக முந்திய மன்னர் பு சீ ஷ்

காணப்பட்ட பதிவின் படி, பு சீ ஷ் என்பவர் சீனாவின் மிக முந்திய மன்னர் என்று சீனாவின் பழைய நூல்கள் கூறுகின்றன. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்தார்.

பு சீஷ் என்பவரின் பிறப்பு மிகவும் விசித்திரமானது. அவருடைய தாயார் ஹுவா சியு ஷ், ஒரு மென்மையான காற்று வீசி, வானம் தெளிவாக இருந்த ஒரு நாளில் அவள் ஒரு சதுப்பு நிலத்தின் ஓரமாக விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெரிய காலடித்தடம் அவளை ஈர்த்தது. அவள் மிகவும் வியப்படைந்து அதன்மேல் மிதித்தாள். அதற்கு பின்னர் அவள் கருவுற்றாள். விரைவில் பு சீ ஷ் பிறந்தார்.

பு சீ ஷ்க்கு ஒரு தங்கை இருந்தாள் நியு வா என்பது அவளுடைய பெயர். அண்ணன் தங்கை இருவரும் விசித்திரமாக வளர்ந்தனர். டிராகனின் உடலும் மனிதனின் தலையும் ஆக தோற்றமளித்தனர். பு சீ ஷ் என்பவர், டிராகன் படத்தை தன் அடையாளமாக கொள்ளும் ஒரு கண இனத்தின் தலைவராக இருப்பார் என்று இது குறிக்கின்றது.

பு சீ ஷ் இருந்த காலம், உற்பத்தியாற்றல் வளர்ச்சியடைந்த காலமாகும். பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கும் அவருக்குமிடையில் தொடர்பு இருந்தது. பழைய நூல்களில் எழுதப்பட்ட படி, வான் மற்றும் நிலத்தின் நிலைமை, பறவை உள்ளிட்ட விலங்குகளின் நடை அடையாளம் ஆகியவற்றை கண்டு அவர் எட்டு மர்மமான அடையாளக் குறிக்களை உருவாக்கினார். இந்த அடையாளக் குறிகள் ஒன்றுடன் ஒன்று இசைவாக இருக்கின்றன. உலகின் எல்லா பொருட்களின் பெயரைப் பிரதிபலிக்கின்றன. எனவே, மக்கள் இவற்றைக் கொண்டு,அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களை பதித்திருக்கிறார்கள். இதனால், கயிறைக் கட்டி, விஷயங்களை பதிவு செய்யும் முறை முடிவுக்கு வந்தது.

இவ்வாறு கயிறு தேவையற்ற பொருளாக மாறியது. பு சி ஷ் கயிறுகளால் மீன் வலையைப் பின்னி, மீன்பிடிக்கும் தொழில் நுட்பத்தையும் விலங்குகளை வேட்டையாடும் நுட்பத்தையும் அவர் மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அமோக அறுவடை, திருமணம் முதலிய முக்கிய நிகழ்ச்சிகளைக் கொண்டாடும் வகையில், பு சீ ஷ் "சே" எனும் இசைக் கருவியையும் தயாரித்து "ஜியா பியன்"எனும் இசையை எழுதினார். இவ்வாறு மக்களின் பொருளாதார மற்றும் பண்பாட்டு வாழ்க்கை பெரிதும் செழுமையடைந்தது. பு சீ ஷ், மரத்தைத் துளைத்து நெருப்பை உண்டாக்கும் முறையை மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். இவ்வாறு மக்களின் மிரும் போன்ற வாழ்க்கை முறை முடிவுக்கு வந்தது.

பு சீஷ் அப்போது முக்கியமாக இன்றைய சீனாவின் ஹோனான் மாநிலத்தின் ஹூவாய் யாங், ஷான்துஹ் மாநிலத்தின் ஜிநிங், மற்றும் ச்சுப்பூ பிரதேசங்களில் வாழ்ந்தார். எனவே, ஜிநிங் நகரில் இன்றும் பு சீ ஷ்வின் கல்லறை உள்ளது. சீன பாரம்பரிய நாள்காட்டியின் படி ஆண்டுதோறும் மார்ச் 3ஆம் நாள் பல்வேறு திசைகளிலிருந்து வரும் கிராமவாசிகள் அங்கு ஒன்றுகூடி, இந்த சீனத் தேச நாகரிகத்தின் மூதாதையாரை வழிபடுகின்றனர்.


1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040