|
![]() |
தா யூ
4000 ஆண்டுகளுக்கு முன், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்துக்கு எதிரான போராட்டத்தில் தா யூ என்பவர் பெரும் பங்காற்றியதால் மக்களிடையில் பெரும் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்றார். அப்போதைய ஹுவா சியா இனத்தின் தலைவர் சுன் தனது பேரரசர் பதவியை தாயூவுக்கு அளித்தார். வெள்ளத்தை கட்டுப்படுத்திய தாயூ பற்றிய கதை மக்களிடையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பரவிவருகின்றது.
யோ என்பவர் ஆட்சியில் இருந்த போது, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பயிர்கள் நீரில் மூழ்கின. வீடுகள் இடிந்துவிட்டன. மக்கள் உயரமான இடங்களுக்கு குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி விவாதிக்க யோ கூட்டம் நடத்தினார். பல கண தலைவர்களும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த குன்னை அனுப்புமாறு முன்மொழிந்தனர். ஆனால் குன் நீரை தடுக்கும் வழியை பயன்படுத்தியதால் 9 ஆண்டுகள் கழிந்தும் வெள்ளம் கட்டுப்படுத்தப்படாமல் மேலும் கடுமையாக மாறியது. குன்னை கொல்லை செய்து, குன்னுடைய மகன் யூவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பேரரசர் சுன் அனுப்பினார்.
யூ தனது தந்தையின் வழிமுறையை மாற்றினார். அவர் கால்வாயை வெட்டி, ஆற்றுப் படுகையைச் சீர்செய்து வெள்ள நீரைக் கடலில் கலக்கச் செய்தார். அவர் பொது மக்களுடன் சேர்ந்து உழைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல நீர் மட்ட உயரத்தைக் கணக்கிடும் கருவிகளையும் தயாரித்து, அளவீட்டு முறையையும் கண்டறிந்தார்.
13 ஆண்டுகால முயற்சி மூலம், வெள்ள நீர் கடலில் தடையின்றி கலந்தது. வயலில் பயிர் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டது. யூ திருமணம் செய்த சற்று காலத்துக்குப் பின்னர் வெள்ளத்தை கட்டுப்படுத்த எங்கெங்கும் போய்வந்தார். அவர் பல முறை தனது வீட்டு வாசல் வழியாக சென்றாலும் வீடுகளுக்குள் நுழையவில்லை. ஒரு முறை, அவருடைய மகன் பிறந்த போது, யூ வெளியே குழந்தை அழுவதை கேட்ட போதும் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை.
பின்னர், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சாதனை நிகழ்த்திய யூவை பாராட்டும் வகையில் மக்கள் அவரை மிகவும் மதிப்புடன் தாயூ என்று அழைக்கத் தொடங்கினர். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியதால், அடுத்த கண இனக் கூட்டணியின் தலைவராக குன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியது தாயூ ஆற்றிய முதலாவது பங்காகும். அப்போது, கண இனங்கள் பிரிந்திருந்த நிலைமையில் அவர், சீனாவில் ஒருமுகமான வெள்ளக்கட்டுப்பாட்டு கொள்கையை வகுத்தார். அவர் மலைகளைச் சீர்செய்வதன் மூலம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறையை கண்டறிந்தார். மலை மற்றும் கடல் பற்றிய நூல் எழுதுமாறு அவர் தனது உதவியாளர் போயி என்பவருக்கு கட்டளையிட்டார். இந்த நூலில், சீனப் பிரதேசத்தில் உள்ள மலைகள், ஆறுகள், மக்களிடையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், பறவைகள் ஆகியவை பற்றி முதன்முறையாக எழுதப்பட்டிருந்தன.
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் கடமையை தாயூ நிறைவேற்றியதால், மக்கள் தங்களது வீடுகளை மீண்டும் கட்டி, அமைதியாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் வேலை செய்ய துவங்கினர். அவர் தலைவராக பதவி ஏற்ற பின், தொடர்ந்து அயராது உழைத்து அரசியல் விவகாரங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். எனவே அவருடைய ஆட்சிகாலத்தில், சமூகம் ஒரு புதிய காலகட்டத்தில் நுழைந்தது.
CLAN கம்யூன் சமூகத்தின் பிற்பாதியில், CLAN, மற்றும் கண இனங்களின் தலைவர்கள் தமது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி, எஞ்சியுள்ள உற்பத்திப் பொருட்களை தங்களது சொந்த சொத்தாக மாற்றி பிரபுக்களாக மாறினர். கண இனங்களுக்கிடையில் சண்டை நிகழ்ந்தது. சிறைப்படித்த கைதிகளை அடிமைகளாக மாற்றி, தங்களுக்காக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார். இவ்வாறு, அடிமைகள் அடிமைகளின் எஜமானர் என்ற இரண்டு வர்க்கங்கள் படிப்படியாக உருவாயின. இதனுடன் CLAN கம்யூனும் சின்னப்பினமாகிவிட்டது.
பின்னர், யூ இருந்த சியா கண இனத்தின் பிரபுகள், யூவின் மகனை தலைவராக முடிவு செய்தனர். இவ்வாறு, CLAN கம்யூன் காலகட்டத்தின் கண இனக் கூட்டணியின் தேர்தல் அமைப்புமுறை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு, அரசரின் மகன் தான் அரசர் பதவி ஏற்க வேண்டும் என்ற முறைமை ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, சீன வரலாற்றில் முதலாவது அடிமை அதிகாரமுறை மன்னராட்சி-சியா வம்ச ஆட்சி தோன்றியுள்ளது.
|