|
![]() |
சென் னொங் ஷ்
5000 ஆண்டுகளுக்கு முன், சென் னொங் ஷ் என்பவர், ச்சியாங் பெயரைக் கொண்ட ஒரு கண இனத்தின் தலைவராக இருந்தார். ஒரு தலைவராக இருந்த போதிலும் அவர் அந்த இனத்தின் சாதாரண மக்களை போல ஆண்டு முழுவதும் வயலில் உழைத்தார். அவர் சீனாவின் மிக முந்திய வேளாண் கருவியை அவர் கண்டுபிடித்ததால், வேளாண் துறை பெரும் வளர்ச்சி கண்டது. வேளாண் தொழிலில் ஈடுபட்ட மக்கள் ஒருவரை மிகவும் மதிப்புடன் சென் னொங் சி என அழைத்தனர்.
சென் னொங் ஷ் வாழ்ந்த காலம், தந்தை தலைமை வகிக்கும் குலக் கம்யூனின் துவக்கக் காலமாகும். அப்போது, அடக்கிஒடுக்குவதும், சுரண்டலும் இல்லை. மக்கள் சமமாகவும் நட்பாகவும் வாழ்ந்தனர். சென் னொங் சி ஆட்சியில் இருந்த போது, ஆண்கள் வெளியே உழவு வேலையில் ஈடுபடுவதும்,. பெண்கள் வீட்டில் நெசவுப் பணியில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்தது. நாட்டை நிர்வகிப்பதற்கு, சிறையும் தண்டனையும் வேண்டாம். ஆட்சிபுரியும் அரசருக்கு படையும் காவல் துறையும் தேவையில்லை என்ற நிலை நிலவியது.
சென் னொங்சி சீனாவின் மிக முந்திய மருத்துவ நிபுணரும் ஆவார். மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு துன்பப்படுவதை கண்டு அவர் மிகவும் கவலைப்பட்டார். பல்வகை தானியங்கள் மனிதனின் உடல் நலனுக்குத் துணைபுரிகின்றன. அப்படியானால் பல தாவரங்களின் கனிகளும் தண்டுகளும் நோய்வாய்ப்படும் மக்கள் குணமடைவதற்கும் துணைபுரிய கூடும் என்று நினைத்தார். எனவே, அவர் மலைப் பகுதிகளுக்குச் சென்று பல்வகை மூலிகைச் செடிகளைத் தேடி எடுத்து, தானே சுவை பார்த்தார். இதனால் அவர் அடிக்கடி நஞ்சேரியது. சில வேளைகளில் ஒரு நாளைக்கு 70 தடவைக்கு மேல் நஞ்சேறியது,அவர் எழுதித் தொகுத்த"சென்னொங் பை சௌ"என்ற நூலில் பல்வகை நோய்களுக்கு சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென் னொங்சி ஒரு வானிலை நிபுணரும் ஆவார். அவர் பு சீ ஷ் எழுதிய எட்டு குறிப்புக்களை 64 குறிப்புக்களாக விரிவாக்கி எழுதினார். இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி சில விஷயங்களை பதிவு செய்யலாம் ஒருவரின் எதிர்காலத்தை யூகித்துக் கூறலாம். தவிரவும், பலர் தமக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய தெரியாமல், தேவையற்ற பொருட்களை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்தனர். இது வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. எனவே அவர் மக்களை அழைத்து, ஒரு இடத்துக்குச் சென்று தமது பொருட்களை மற்றவருடன் பரிமாறிக்கொள்ளும் படி,தூண்டினார். இவ்வாறு, சீனாவில் மிக முந்திய வர்த்தகச் சந்தை உருவானது.
உழைத்துக் களைத்த மக்கள் பொழுதுபோக்கில் ஈடுபடத் துணைபுரியும் வகையில், சென் னொங்சி, "வூ சியன் ச்சின்"எனப்படும் ஒரு இசைக் கருவியை தயாரித்தார். இந்த இசைக் கருவி பறவைகள் கூவுவது போன்ற இனிமையான ஒலியை ஏற்படுத்தக் கூடியது, பின்னர் அவருடைய மகன் "ச்சுங்"என்ற ஒருவகை இசை கருவியைத் தயாரித்ததோடு, பல பாடல்களையும் இயற்றினார். இந்த இசை கருவிகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
சென் னொங் ஷ் 140 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பின்னர், ஹுவாங் பேரரசர் ஆட்சியில் இருந்தார். சென் னொங்சி இறந்த பின் இன்றைய ஹுநான் மாநிலத்தில் உள்ள சாங் ஷா என்ற நகரில் புதைக்கப்பட்டார். இன்றும் அங்கே அவருடைய கல்லறை உள்ளது. இந்தக் கல்லறையை யன் பேரரசரின் கல்லறை என மக்கள் அழைக்கின்றனர்.
|