• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைகால பேரரசர்கள்]

யோவும் சுன்னும்

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், பழமையான ஹூவா சியா இனம் படிப்படியாக உருவாகும் போக்கில், சீனத் தேசத்தில் அடுத்தடுத்து சில சிறந்த தலைவர்கள் தோன்றினர். அவர்களில் யோ, சுன், யூ ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

யோ என்பவர், ஹூவா சியா இனத்தின் மூதாதையர் ஹுவாங்தியின் அடுத்த தலைமுறையினராவார். அவர் விவேகமானவர், மற்றவர்களால் மதிக்கப்பட்டவர். 16வயதான போது, கண இனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யோ பிங்யாங் நகரை தலைநகராக கட்டினார் என்று வரலாறு கூறுகிறது. இது நவ சீனாவின் ஷான்சி மாநிலத்தின் லின்பென் நகராகும். இன்றைய லின்பென் நகரில் ஜின் வம்சகாலத்தில் (கி.மு.265-420)கட்டப்பட்ட யோ கோயிலும் தாங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட யோவின் கல்லறையும் இன்னும் காணப்படுகின்றன.

யோ ஆட்சிக்கு வந்த பின்னர், குணமும் அறிவும் படைத்த திறமைசாலிகளை பயன்படுத்தினார். அவர் இந்த இனத்தவர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்தினார். பல அதிகாரிகளின் பணிகளை சோதனையிட்டார், நற்செயல்களை பாராட்டி, குற்றச் செயலுக்கு தண்டனை விதித்ததால், அரசியல் பணிகள் ஒழுங்கான முறையில் நடைபெற்றன. அதேவேளையில், பல்வேறு பிரிவுகளுக்கிடையிலான உறவை ஒருங்கிணைத்து, இணக்கமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறினார். இதனால் ஆட்சி அமைதியாக நடைபெற்று, அரசியல் ஊழலற்றதாகவும் சமூகம் இணக்கமாகவும் இருந்தன.

யோவின் ஆட்சிக்காலத்தில், காலநிலையைக் குறிக்கும் காலண்டர் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு, உழவர்கள் காலத்துக்கு இணங்க, வேளாண் பணியில் ஈடுபட்டனர். அரசர் யோவின் காலத்தை வேளாண் துறையில் தோன்றிய பாய்ச்சல் முன்னேற்றம் காணப்படும் காலமாக பழங்கால மக்கள் கருதினர்.

சுன்னின் காலகட்டத்தில், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் மிகக் கடுமையாக இருந்தது. குன்றுகள் நீரில் மூழ்கின. உயர் மலைகளில் வெள்ளம் மோதியது. மக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. சுன் இதில் மிகுந்த கவனம் செலுத்தினார். யார் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும் என்று பல வட்டார அதிகாரிகளிடம் கருத்து கேட்டார். அவர்கள் குன்னை பற்றி தெரிவித்தனர். இதனால், குன்னை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துமாறு சுன் குன்னை அனுப்பினார்.

அரசர் சுன்னின் சண்டையிடும் திறமையும் கல்வி அறிவும் மிக சிறப்பாக இருந்தன. தென் பகுதியிலுள்ள வட்டார இனங்களை எதிர்த்து போராடியதோடு, தாமாகவே போரில் படைகளுக்குத் தலைமை தாங்கி கட்டளையிட்டார். காட்டு மிருகங்களைக் கொல்ல அவர் யீ என்பவரை அனுப்பினார். 9 சூரியங்களைச் சுட்டு வீழ்த்தினார். மக்களுக்கு ஏற்பட்ட தீமைகளை நீக்கியதற்கு மக்கள் மிகுந்த நன்றி தெரிவித்தனர். எனவே அவரை அரசராக தேர்ந்தெடுத்தனர்.

யோ ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளிலை தனது வாரிசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். ஒருவரை பரிந்துரை செய்யுமாறு, அவர் பல குறு நிலச் சிற்றரசர்களைக் கோரினார். இந்த சிற்றரசர்கள் சுன்னை பரிந்துரை செய்தனர். சுன் பெற்றோர்களை மதிக்கின்றார். கடும்பத்தில் உறவை சரிவர கையாள்கிறார். குடும்பத்தினர்கள் நற்செயலில் ஈடுபட அறிவுரை கூறுகின்றார் என்று அவர்கள் கூறினார்கள். எனவே, முதலில் சுன் எப்படிப்பட்டவர் என்று சோதனை செய்ய யோ முடிவு செய்தார்.

யோ தமது இரண்டு மகள்களான ஓஹுவாங்கும், நியிங்கும் சுன்னை மணம் முடிக்க முடிவு செய்தார். இரண்டு மக்கள்களிடமிருந்து சுன்னின் குணத்தை அறிந்துகொண்டார். அவர் குடும்ப விவகாரங்களை நன்றாக் கையாள முடியுமா என்பதைப் பார்த்தார். ஓஹூவாங், நியிங் ஆகிய இருவருடன் சஉ ஆற்றங்கரையில் வசித்து, மரியாதையுடன் அவர்களை நடத்தினார் என்பதை யோ கண்டு மகிழ்ந்தார்.

தந்தையார் நியாயத்துடன் நடக்க வேண்டும், தாயார் அன்பாக இருக்க வேண்டும், அண்ணன் நட்பாக இருக்க வேண்டும். தம்பி அடிபணிய இருக்க வேண்டும், மகன் பெறோறை மதிக்க வேண்டும் என்ற ஐந்து விதிகளால் தனது செயல்பாட்டுக்கு வழிகாட்ட வேண்டும் என்று பொது மக்களுக்கு சொல்லிக் கொடுக்குமாறு சுன்னுக்கு யோ பொறுப்பளித்தார். மக்கள் சுன்னின் கூற்றை மிகவும் விரும்பிக் கேட்டார்கள். பின்னர், அதிகாரிகளை நிர்வகித்து, அரசு விவகாரங்களைக் கையாள சுன்னை யோ அழைத்தார். தலைநிகரின் நான்கு வாசல்களிலும் நான்கு திசைகளிலிருந்து வரும் சிற்றரசர்களை வரவேற்கவும் சுன்னுக்கு அவர் பொறுப்பளித்தார். இறுதியில், மலையடிவாரத்திலுள்ள காடுகளில் இயற்கையின் சீற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் சோதனையில் ஈடுபடுமாறு சுன்னை யோ கோரினார். மூன்று ஆண்டுகள் சோதனை செய்த பின், யோ தமது பதவியை சுன்னுக்கு வழங்க முடிவு செய்தார்.

சுன் உற்பத்தியை வளர்த்து, கால்வாய்களையும் கிணறுகளையும் வெட்டி, சிறமைசாலிகளை அதிகமாக திரட்டினார். சுன்னின் ஆட்சிக் காலகட்டத்தில், வேளாண் தொழில் நுட்பமும், தயாரிப்புத் தொழில் நுட்பமும் பெரும் முன்னேற்றும் கண்டன. நாட்டை நிர்வகிப்பதில் அவர் தனது செயல் மற்றும் குணத்துடன் மக்களுடன் இன்பத்துன்பங்களை பகிர்ந்து அனுபவித்தார். பொது மக்கள் சிறந்த உணவு மற்றும் ஆடைகளை பெற்று கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும். மக்கள் அரசின் விவகாரங்களை குறைசூறினாலும் குற்றமில்லை. சுன்னின் ஆட்சியில் மக்கள் மரியாதையுடன் நடந்து, சமூகமு முழுவதும் இணக்கமாக இருந்தது. அரசியல் குறைபாடு இன்றியும், பொருள் ஏராளமாகவும் இருந்தன. இந்த காலகட்டம், அரசியல், உற்பத்தி, கலை ஆகிய துறைகள் மிகவும் ஒளிமயமாக இருந்த காலகட்டமாகும். பின்னர் சுன் தமது பதவியை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் சாதனை நிகழ்த்திய யூவுக்கு வழங்கினார்.

சுன் 110 வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். தற்போது சீனாவின் ஹுனான் மாநிலத்தின் நிங்யுவான் மாவட்டத்தின் தெற்கில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜியுயீ ஷான் மலையில் சுன்னின் கல்லறை உள்ளது. யோவும் சுன்னும் திறமைசாலிகளை நியமித்து நேர்மையாக இருக்கும் உன்னத செயல்பாடும் குணமும் தலைமுறை தலைமுறையாக மக்கள்ல் பாராட்டப்பட்டு வருகின்றன.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040