• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பகுத்தறிவு கதைகள்]
ஜாங் ஹெங்கும் அவருடைய நிலஅதிர்வு உணர் கருவியும்

ஜாங் ஹெங் என்பவர், கிழக்கு ஹன் வம்சத்தில் முதலாம் இரண்டாம் நுஅறறாண்டில் வாழ்ந்த ஒரு சீனக் கணிதவியலாளர். வானியல் அறிஞர், புவியியலாளர். அந்தக் காலத்தில் இன்று ஹெனான் மாகரணம் என அழைக்கப்படும் தலைநகர லொயாங்கில் அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்பட்டதுச் சொர்க்க வழிபாட்டு விழாவுக்காக மன்னன் மக்களுக்கு அதிகவரிகளை விதித்தான். ஆனால், ஜாங் ஹெங் என்ற விஞ்ஞானி இது ஓர் இயற்கையான செயல் எனக் கருதி ஆய்வினைத் தொடங்கினார்.

132ம் ஆண்டில் ஜாங் ஹெங், பூமி அதிர்ச்சிகளை அளவிடுவதற்காக ஒரு கருவியைக் கண்டு பிடித்தார். ஐரோப்பாவில் இதை ஒத்த கருவி பதினாறு நூற்றாண்டின் இறுதி வரை கிடைக்க வில்லை. அதன் பின்னரே, ஒரு பூமி அதிர்வு உணர் கருவி பிரான்ஸில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இவருடைய கருவி, வெண்கலத்தால் செய்யப்பட்டது. இது ஒரு கலசம் போன்றது. இது எண்கோணவடிவம் உடையது. எட்டு அடிவிட்டம் கொண்டது. இதன் உற்பக்கத்தில் எட்டு செம்பு கம்பிகளுடன் இணைக்கப்பட்ட செப்புப்பென்டுலம் உள்ளது. கருவியின் வெளிப்பக்கத்தில் நுனியை சுற்றி எட்டு டிராகன் தலைகள் இருக்கின்றன. அவை, ஒவ்வொன்றின் வாயில் ஒரு பந்து இருக்கின்றன. அடியில் எட்டுத் தவளைகள் திறந்த வாயுடன் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ட்ரஹனின் நாகத்தின் தலைக்கு நேர் கீழாக இருக்கின்றன. பூமி அதிர்ச்சி ஏற்படுகின்ற போது, ஒரு பந்து ஒரு டிராகனின் வாயில் இருந்து வெளியே வந்து தவளையின் வாய்க்குள் விழும். அப்போது எழும் ஒரு ஒலி, அரண்மனையில் இருப்பவர்களை நிலநடுக்கம் பற்றி எச்சரித்து எழுப்புவதற்கு போதுமானது. பின்னர், பூமி அதிர்ச்சி எந்தத் திசையில் இருக்கிறது என்பதை தீர்மானிப்பதற்கு எந்தப் பந்து எந்தத் திசையில் இருந்து விழந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

இக்கருவியானது தொடர்ந்து வந்த நான்கு ஆண்டுகளில் லோயாங்கில் நிகழ்ந்த ஒவ்வொரு பூமி அதிர்ச்சியையும் சரியாகக் கணித்தது. கி.பி.138யில், ஒரு முறை மட்டும் தான், மேற்கு பக்கம் நோக்கியிருந்த டிராகன் வாயிலுள்ள பந்து வீழந்தது. ஆனால், குறிப்பிட அந்நாளில் லோயாங்கைச் சுற்றி வழக்கத்துக்கு மாறாக ஒன்றும் நிகழவில்லை. மக்கள் கருவியின் செயல்திறன் பற்றி ஐயம் கொண்டனர். ஆனால், நான்கு நாட்களுக்குப் பின்பு லோயாங்கின் ஒரு மேற்கு மாநிலமான கான்சுவிலிருந்து வந்த அறிக்கை, இது புமி அதிர்ச்சியின் ஒரு கொடூரத்தில் சிக்கியதாகக் கூறியது.

இந்த நிகழ்வானது, இறுதியாக பூமி அதிர்வுக் கருவியின் உயர்ந்த உணர்திறனை மட்டும் அல்ல அதன் தல்லியமான தன்மையையும் மக்களுக்கு நம்ப வைத்தது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040